கண்களின் வார்த்தைகள் புரியாதோ!

காதலன் காதலிக்குத் தனது காதலைப் பல வழிகளில் தெரிவிப்பதுண்டு.

நமது நாயகன் தன்னுடன் படிக்கும் பெண்ணுக்குக் கேள்வி-பதில் பாணியில் அனுப்பிய கடிதம் இதோ..

அன்புள்ள ஆஷா,

நீ என்னைக் காதலிக்கிறாயா என அறிந்து கொள்ள சில கேள்விகளை அனுப்பியிருக்கிறேன். தவறாமல் பதிலளிப்பாய் என எதிர்பார்க்கிறேன்.

1. நீ வகுப்புக்குள் நுழையும்போதெல்லாம் உன் பார்வை என் மீதே விழுகிறது. காரணம்..

அ. என் மீது உனக்கு உள்ள காதல்
ஆ. உன்னால் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது
இ. ‘அப்படியா, நான் பார்க்கிறேனா என்ன?’ என நினைக்கிறாய்

2. லெக்சரர் ஏதாவது ஜோக் சொல்லும்போது என்னைப் பார்த்தவாறே சிரிக்கிறாய்.

அ. நான் சிரிப்பதைப் பார்க்க உனக்குப் பிடிக்கும்
ஆ. நான் ஜோக்கை ரசிக்கிறேனா எனப் பார்க்கிறாய்
இ. நான் சிரிக்கும்போது உனக்கு வேடிக்கையாய் இருக்கிறது

3. நீ குழந்தையாக இருந்தபோது எடுத்த ஃபோட்டோவை உன் சினேகிதிகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கும்போது நான் வந்ததும் அதை ஒளித்தாய்

அ. உனக்கு வெட்கமாக இருக்கிறது
ஆ. தயக்கமாக இருக்கிறது
இ. காரணம் தெரியாது

4. நீ வகுப்பில் நண்பிகளுடன் பாடிக்கொண்டிருக்கும்போது நான் உள்ளே நுழைந்தேன். உடனே பாட்டை நிறுத்தி விட்டாய்.

அ. என்னெதிரில் பாடுவதற்கு உனக்கு வெட்கம்
ஆ. என்னைப் பார்த்ததும் திகைத்து விடுகிறாய்
இ. எனக்கு உன் பாட்டு பிடிக்குமோ, பிடிக்காதோ என்று பயம்

5. நீ அன்று மாடிப்படியில் தடுக்கி விழ இருந்தபோது நான் உனக்குக் கை கொடுத்தபோது கூட நீ என் நண்பனின் கையைத்தான் பிடித்துக்கொண்டாய்
அ. நான் ஏமாந்து போவதைப் பார்ப்பதில் உனக்கு ஒரு சந்தோஷம்
ஆ. என் கையைப் பிடித்தால் அப்புறம் விடத் தோன்றாது
இ. ஏனோ, காரணம் தெரியாது

6. நீ நேற்று பஸ்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தாய். னால் பஸ் வந்தபிறகும் ஏறவில்லை

அ. நான் வரவேண்டும் எனப் பார்த்திருந்தாய்
ஆ. என்னைப்பற்றி கனவு கண்டுகொண்டிருந்ததால் பஸ் வருவதை கவனிக்கவில்லை
இ. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்தபோது நீ என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாய்

அ. நீ என்னைத் திருமணம் செய்யப்போவதால்
ஆ. உனது அப்பா, அம்மா என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
இ. ஏதோ பக்கத்திலிருப்பதால் அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்பதால்

8. நான் பெண்கள் தலையில் ரோஜா வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன். நீயும் அடுத்தநாள் ரோஜா சூடிக்கொண்டு வந்தாய்.
அ. எனக்குப் பிடிக்கும் என்பதால்
ஆ. உனக்கு ரோஜா பிடிக்கும்
இ. அன்று ரோஜாப்பூவை யாரோ உனக்குக் கொடுத்தார்கள், வேறு எதுவும் காரணமில்லை

9. அன்று எனக்குப் பிறந்தநாள். நான் காலை றுமணிக்கு கோவிலுக்கு வந்தபோது நீயும் அங்கு வந்திருந்தாய்

அ. என் பிறந்தநாளன்று என்னுடன் கடவுளைப் பிரார்த்திக்க விரும்பினாய்
ஆ. வேறு யாரும் எனக்கு வாழ்த்துக் கூறும் முன் நீ கூற விரும்பினாய்
இ. உனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் கோவிலில் என்னை வாழ்த்த நினைத்தாய்.

மேலே உள்ள கேள்விகளின் பதில்களுக்கு
அ. 10 மார்க்
ஆ. 5 மார்க்
இ. 3 மார்க்

40க்குமேல் மார்க் வாங்கியிருந்தால் நீ என்னை நிச்சயமாகக் காதலிக்கிறாய் என்று பொருள். உடனே சொல்லிவிடு

30லிருந்து 40க்குள் – காதல் அரும்பிக்கொண்டிருக்கிறது

30க்குக் கீழ் – வேறு ஆளைப் பார்

இந்தக் கேள்விகளுக்கு ஆஷாவும் கேள்விகளிலேயே பதில் அனுப்பினாள்.

1. யாராவது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தால் பார்வை சாதாரணமாக அங்குதான் போகும்
அ. ஆமாம். ஆ. இல்லை

2. ஒரு பெண் சிரித்துக்கொண்டே யாரையாவது பார்த்தால் அதற்குப் பெயர் காதலா?

அ. ஆமாம் ஆ.இல்லை

3. பாடிக் கொண்டிருக்கும் போது வரிகளை மறந்துவிட்டால் பாடலை நிறுத்துவார்கள்

அ. ஆமாம். ஆ.இல்லை

4. நான் என் தோழிகளுக்கு என்னுடைய சின்ன வயசு போட்டோக்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது நீ உன் மூக்கை நுழைத்தாய்.
அ. ஆமாம். ஆ. இல்லை

5. நான் உன் கையைப் பிடிப்பதை தவிர்க்க நினைத்தேன்

அ. ஆமாம். ஆ.இல்லை

6. என்னுடைய உயிர்த் தோழிக்காக நான் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கக்கூடாதா?

அ. ஆமாம் ஆ. இல்லை

7. உன்னை என் நண்பனாக எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்துவது தவறா?

அ. ஆமாம் ஆ. இல்லை

8. உனக்கு தாமரைப்பூ பிடிக்கும், வாழைப்பூ, காலிஃப்ளவர் பிடிக்கும் என்று கூட சொன்னாய். அது உண்மைதானே?

அ. ஆமாம். ஆ இல்லை

9. ஓ! அன்று உனக்குப் பிறந்தநாளா? அதுதான் கோவிலுக்கு வந்திருந்தாயா? நான் தினமும் கோவிலுக்கு வருவேன் என்று உனக்குத் தெரியுமா?

அ. ஆமாம். ஆ. இல்லை

நீ எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஆமாம்’ என்று பதில் சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை என்பது புரிந்திருக்கும். இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதல் என்றால் என்னவென்று புரியவில்லை என்று அர்த்தம்.

About The Author

5 Comments

  1. mani

    ஏன்யா…நெடுலேருந்து திருடி பழைய விஷயத்த புதுசா போட்டிருக்க

  2. kaveri

    வெர்ய் நிcஎ ஜொcக்………. ரொம்ப நால் பதில் தெரியாம தவிச்சிட்டு இருந்தேன். பரவால இப்ப பதில் கிடைச்சுடுச்சு ரொம்ப தன்க்ச்….

  3. p.ramar

    காதல் அனுபபம் அன்னன்னுக்கு ரொம்ப அதிகம் nanri

Comments are closed.