கிழக்குச் சாளரம் (2)

சிவந்த அலகைக்
கோதியது தொடர்களில்.
கவிதை வேர்களின்
உதடுகளில்
அர்த்தத்தின் மார்புக் காம்புகள்.

சப்தம் அடங்கச்
சந்தங்களின் சந்தில்
தென்றல் நுழைந்தது.
எழுத்துகளின்
விளிம்பு ததும்பக்
கிளி மொழி.

கவிதையின்
கடைசி வாக்கியம் நீண்டு
நிர்மாணித்தது – ஒரு
கூண்டு.

படக்கென்று அதில் என்னை
அடைத்துவிட்டுப்
பறந்தது வான வெளியில்
கிளி!

(ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 5 – மின்னூலில் இருந்து)

About The Author