சிறகுகள் முளைக்கும் தருணம் (1)

அரக்கப்பரக்கப் பறந்து
கண்டதைத் தேடி
வலை புதர் சிக்கி
சீர்கெட்டு
எப்படியோ
வலை மீண்டு
மீண்டும் சிறகொடிந்து
சவமாகி
இருட்கூண்டொன்றினுள்
உறைந்துகிடக்கிறேன்

யுகங்கள் கடக்க
எப்படியோ அதிசயமாய்
ஒடிந்த சிறகுகள்
மீண்டும் துளிர்க்க
பறவையாகிறேன் மீண்டும்-
எனக்கான என் வானில்
எல்லையற்றுப் பறக்க.
வலசைபோகும் பேரில்லாப் பறவை

நானொரு பேரில்லாப் பறவை
வலசைபோவது என் இயல்பு
உன்னைப்போல்
கோழியென்று
நினைத்துக்கொள்ளாதே என்னையும்:
எனக்குப் பேரேதும் இல்லை
(எந்தப் பறவைக்கும்தான்)
என் மொழியை
என் சக பறவைகள் மட்டுமே
அறியக்கூடும்

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author