விரல் தொட்ட வானம் (17) -மீளாதொரு நிலையில்

மீளாதொரு நிலையில்

அடவி போன்ற அறையைப்
பார்த்துவிட வேண்டுமென்பதில்
முனைப்பு காட்டினேன்.
எதுவுமில்லையென
நுழைவாயில் முன் தடுத்துச் சொன்னான்
முகத்தில்
வன்னியை அணிந்து கொண்டு.
வெளித்தாழ்ப்பூட்டை இழுத்தேன்
அசைத்தேன்
சாவி இல்லாமல் திறப்பதற்கு.
மீளாதொரு நிலையில்
சொன்னால் நம்பென அவனே
தாழ் நீக்கிய அந்த நாழிகையில் வெளியேறியது
ஏதோ ஒரு நிகழ்வில் கசிந்த நெடியொன்று
அவன் முகத்தில் தன் விரல்கள் பதித்து.

பிசகல்கள்

இயல்புகள் உதறி
சில நேரங்களில்
நிறைகுடம் ததும்புகிறது…
நேர்க்கோடு நெளிகிறது…
கோலம் மீறி
புள்ளி நகர்கிறது…
மிகையான நினைவுகள்
உள்ளெழுந்தால்
இப்படித்தான் நேருமோ…?
பிசகல்கள்…?

–தொட்டுத் தொடரும்.

About The Author