வெஜிடபிள் இட்லி

தேவையானவை:

புழுங்கல் அரிசி – 1 கோப்பை
முளை கட்டிய பாசிப்பயறு – 2 கோப்பை
உளுத்தம் பருப்பு – ½ கோப்பை
பீன்ஸ், காரட், கோஸ் – 250 கிராம்
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – ஒரு துண்டு
நறுக்கிய கொத்துமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறியதும் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளை மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அரைத்த மாவில் இந்தக் காய்கறிகள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு, அதை இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக வார்த்தால் சுவையான ‘வெஜிடபிள் இட்லி’ தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author