இராசிபலன்கள்( 16-3-2015 முதல் 22-3-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். எடுத்த காரியங்களைச் சற்று முயற்சியுடன் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டு தொழில்களைத் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் உதவித் தொகைகள் கிடைப்பதில் இன்னும் சற்றுத் தாமதம் ஏற்படலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். கணவன் – மனைவி உறவில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் வந்து சேரும். பயணத்தின்போது கவனத்துடன் சென்று வருதல் சிறந்ததாகும்! பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளில் உறவினர்களின் தலையீட்டால் ஓரளவு நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களுடன் பணப் பிரச்சினை சம்பந்தமாக மனக் கசப்பு ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவது நல்லது! குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் மன சஞ்சலமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலை விலைக்கு வாங்காதீர்கள்! தந்தை – மகன் உறவில் விரிசல்கள் ஏற்பட்டுப் பின்னர் விலகும். வங்கிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் காலமாகும். பழுதுபட்ட ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த உதவித் தொகைகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். தின்பண்ட வியாபாரிகள், சமையல் கல்லூரி நடத்துபவர்கள், அதில் பணிபுரிபவர்கள், அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் தேவையில்லாத மன சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் – வாங்கலில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது!

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகளைக் குறைப்பதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பெண்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். நாட்பட்ட தீராத நோய்கள் தீர வேண்டிப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் நல்ல பலன் அடைவீர்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவை அடைவீர்கள். பழுதுபட்ட ஆலயம், வீடு, வாகனம் போன்றவற்றைப் புதுப்பிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். மனைவியின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தகவல் மையங்கள், நண்பர்கள் ஆகியோர் உதவியால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. கட்டடம் சம்பந்தமான பணிகளில் ஈடுபடுபவர்கள், நில புலன்கள் வாங்குவோர் விற்போர், கட்டுமானப்பொருள் வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள், அழகு சாதன வியாபாரிகள், திருமண மண்டபம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய பிரச்சினைகள் வர இருப்பதால் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது!

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாறாமல் இருங்கள்! மாணவர்கள் மிகவும் கவனத்துடன் கல்வி பயின்று வருதல் நல்லதாகும்! வாகனங்களில் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும்! சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! கொடுக்கல் – வாங்கல் தொழில் செய்பவர்கள் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்! கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் பொருள் வரவு உண்டாகும். குழந்தைகளுக்குப் பரிசும் பாராட்டுக்களும் கிடைக்கும் காலமாகும். குடும்பத்தில் காரணமில்லாத மனக் கசப்பும் மருத்துவச் செலவும் ஏற்படலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது! கொடுக்க வேண்டிய பழைய கடன்களால் மீண்டும் தொல்லைகள் வந்து சேரும்! கணவன் – மனைவி உறவில் இருந்த மனக் கசப்பு நீங்கி மீண்டும் ஒன்று சேருவர். வழக்குகள் – குறிப்பாக, நிலம் சம்பந்தமான வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்கும் காலமாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் கவனத்துடன் பணியாற்றுவது சிறந்தது!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெகு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திரும்பி வராத பணம், பொருட்கள் பெரிய மனிதர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயங்களுக்காகப் புதிய முயற்சிகளில் தலையிட்டு வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. தீராத நோய்கள், கடன் தொல்லைகள் தீர ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வங்கிகள் மூலம் புதிய வீடு, நிலம் வாங்கும் திட்டங்கள் சற்றுத் தாமதமாகவே நிறைவேறும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் நினைத்த இடத்திற்குப் பணியிட மாற்றமும் ஏற்படலாம். திரைப்படம், நாடகம் போன்ற துறைகள் சார்ந்தவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகி, விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் மன நிறைவடைவீர்கள். நீதிமன்றம், வழக்கு போன்ற விஷயங்களில் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அழுகுபொருள் வியாபாரிகள், மதபோதகர்கள், அசைவ உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் ஆகியோர்க்கு மிகவும் நல்ல பலன்கள் ஏற்படும் காலமாகும். கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆனால், இருவருக்கும் இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று நீடிக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பிப் பணம் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். சகோதர சகோதரிகளால் சிற்சில நன்மைகள் வந்து சேரும். குடும்பச் சொத்து விஷயங்களில் வழக்கு சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தள்ளி போடுதல் உகந்ததாகும்! கண், காது, முகம் ஆகியவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகும். இதுநாள் வரையில் தடைப்பட்டு வந்த காரியங்களை மன தைரியத்துடன் சற்று முயற்சி எடுத்துச் செய்து முடிப்பீர்கள்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். குழந்தைகளுக்காக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். செய்யாத குற்றத்துக்காக அவப்பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வடமேற்குத் திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். வெகு காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த பூர்விகச் சொத்துக்கள் சட்டப்பூர்வமாகக் கைக்கு வந்து சேரும். விவசாயம் செய்பவர்கள் சற்று கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், எழுத்தாளர்கள், இசை அமைப்பாளர்கள், போக்குவரத்து நிறுவனம் போன்றவற்றை நடத்துபவர்கள், பத்திரிக்கைத்துறை சார்ந்தவர்கள், புத்தக வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் பங்கு கொண்டு நிம்மதி அடைவீர்கள். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! புதிய வீடு, நிலம் வாங்குவதற்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். நரம்பு, எலும்பு போன்றவற்றில் சிற்சில பாதிப்புகள் வந்து போகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல் பாதிப்புக்களால் மன உளைச்சலும் செலவுகளும் உண்டாகலாம். பூ, பழம், சிற்றுண்டி வியாபாரிகள், வாசனைத் திரவிய வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்த பணியாளர்கள், மடாதிபதிகள், பூஜைப்பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் இல்லம் நடத்துபவர்கள், தாய் – சேய் நல விடுதிப் பணி செய்பவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! பொதுக் காரியங்களில் தலையிட்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் பெரியவர்களின் தலையீட்டால் கிடைக்கும். தீராத நாட்பட்ட நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கடன் கொடுத்து நீண்ட காலமாகத் திரும்பி வராத பணம் கை வந்து சேரும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும் மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நன்மையைத் தரும். விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். வேற்று மதத்தவரால் சில ஆதாயங்கள் கிடைக்கும். பணத் தேவைகளுக்காக பூர்விகச் சொத்துக்கள் சிலவற்றை விற்றுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நகை வியாபாரிகள், பூஜைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பேராசிரியர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். பயணத்தில் மிகுந்த கவனத்துடன் சென்று வாருங்கள்! வெகு நாட்களாகக் காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். நீண்ட காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். தேவையில்லாத புதிய நண்பர்களின் தொடர்புகளால் வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! மகான்களின் தரிசனங்கள் மூலம் நிம்மதி அடைவீர்கள். மிக நீண்ட காலமாக நினைத்துக் கொண்டு இருந்த புனிதப் பயணத்திற்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகளால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை. புதிய கடன்களை வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் வேண்டும்! வேலைவாய்ப்புக்காக யாரிடமும் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! இரும்பு, இயந்திரம், கணினி, மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றைச் சார்ந்த வியாபாரிகள் – பணியாளர்கள், கமிஷன், தரகு, ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், வேதியியல், மூலிகை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்பவர்கள், தோல் பொருள் வியாபாரிகள், பலசரக்கு, எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் விற்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், விசைத்தறி ஆலை போன்ற ஆலை அதிபர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர், அம்மன் ஆலய வழிபாடுகள் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். காதல் போன்ற பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் வந்து சேரும். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் திருப்தி அடைவீர்கள். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் சில மனக் கவலைகள் வந்து, பின்னர் நீங்கும். விவசாயம் செய்பவர்கள் புதிய விவசாய முறைகளின் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் அடைவீர்கள். உடற்சூடு, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகலாம். புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளுக்கு வங்கிகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். அசைவ உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், அழுகு பொருள் வியாபாரிகள், மத போதகர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும், காளி போன்ற அம்மன் வழிபாடுகளையும் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக வீண் செலவுகள் செய்து ஏமாற்றம் அடையாதீர்கள்! தந்தை – மகன் உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், பூஜைப்பொருள் வியாபாரிகள், மீன்பிடித்தொழில் செய்பவர்கள் ஆகியோர் மிகுந்த லாபம் அடையக்கூடிய காலமாகும். பங்காளிகளுடன் கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது! குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வெகு தூரச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திருடு பொன பொருட்கள் காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான ஏஜன்சி தொழில் செய்வோர் கவனத்துடன் செயல்பட வேண்டும்! இது வரையில் இருந்து வந்த பணத் தட்டுப்பாடு நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுத் தாமதமாகவே தீரும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author