பாபா பதில்கள்

‘சுடுமணலிலே நடந்து போகிற சாமிக்கு செருப்பு தைக்கிற தொழிலாளி ஒருவன் செருப்பு தைத்துக் கொடுத்தான். அதனாலே அந்த சாமி அவங்க வீட்டிலேயே குழந்தையாக பிறக்க வேண்டும் என்கிற மாதிரி வந்தது’ என்று சொன்னீர்கள். அந்த சாமி செருப்பு கேட்கலையே. அவங்களேதானே கொடுத்தாங்க.. அப்படி இருக்கும் போது இவர் ஏன் பிறவி எடுக்க வேண்டும்?

எல்லாவற்றையும் இணைக்கிற ஒரு தெய்வநீதி இருக்கிறது. அந்த தெய்வநீதி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த செருப்பு தைக்கிற தொழிலாளி செருப்பு தைத்துக் கொடுத்ததால் அவனுக்கு ஒரு ரிவார்டு கொடுக்க வேண்டும் என்று நினைப்பதற்கு அந்த மாதிரி வரலாம். அதாவது he did something good. அந்த நல்ல செயலுக்கான ஒரு விளைவு இருக்கணும். Cause and effect. கையை தட்டுகிறோம். கையைத் தட்டியவுடன் அந்த சப்தம் புறவெளியில் கலந்தே ஆக வேண்டும். There is a cause there is an effect. So, he did something good. மேலும், அவனே ஏழை. அவன் ஒரு சாமியாருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், காசு, பணம் கேட்காமல் அவனாக யோசனை செய்து ஒரு செருப்பு தைத்துக் கொடுத்தான்- செருப்பு தானம். அந்த good cause உடைய effect அவனுக்கு கிடைக்க வேண்டும். அதனாலே அந்த மாதிரி ஒரு நிகழ்வு வரலாம்.

ஒரு கிராமத்திலே அம்மன் கோவிலிலே அம்மன் கண்ணிலே லேசாக கண்ணீர் வந்தது. ஏன் அந்த மாதிரி இருக்கிறது? அந்தக் கிராமத்திலே இருக்கிற யாராவது ஒருவருடைய உடலிலே வந்து அம்மன் சொல்லுவாங்க. ‘என் கோவிலிலே உட்கார்ந்து எல்லோரும் சீட்டு விளையாடறாங்க. இப்படியெல்லாம் இருந்தால் ஊருக்கு நல்லது இல்லை’ என்கிற மாதிரி சொல்கிறார்களே? அதெல்லாம் கரெக்டா?

Sometimes it happens.. அதற்கு ‘ஆவிர்பவித்தல்’ என்று பெயர். ‘ஆவிர்பவித்தல்’ என்பது – கோவிலிலே இருக்கிற கற்சிலை பேச முடியாது. So, if it is really with a live energy, உயிர்த்துடிப்புள்ள இறையாற்றல் அந்த கற்சிலைக்கு உள்ளே இருந்தால் it can communicate through a proper medium. அந்த ஊரிலே இருக்கிற யாராவது ஒரு நல்ல பக்தர், அல்லது தகுதி வாய்ந்த ஒருவரது உடலில் ஆவிர்பவித்து தன்னுடைய கருத்துக்களை சொல்லலாம். அந்த மாதிரி பல முறைகள் நடந்திருக்கு. பல பெரிய பெரிய கோவில்களில் எல்லாம் கூட நடந்திருக்கு. திருப்பதி மாதிரி கோவில்களில் நடந்திருக்கு. வரதராஜசுவாமி கோவிலில் நடந்திருக்கு. இதெல்லாம் பாசிபிள். ஆனால், ஒரு expression – – கண்ணிலே ரத்தம் வந்து, தண்ணி வந்து-அதெல்லாம் அவ்வளவு ஈசியாக பாசிபிள் இல்லை.

இதற்கு முன்னாலே ஒரு தடவை ‘பிள்ளையார் பால் குடித்தது’ என்று சொன்னாங்க. அந்த மாதிரியான ஒரு எண்ணம் மனதிலே இருக்கிறபோது அந்த எண்ணத்தினுடைய outlet அது. அந்த எண்ணத்தினுடைய பிரதிபலிப்பு. It may or may not be possible. It depends on the power of the deity and the faith of the people. ‘நான்’ என்பதை அறிவதுதான் ஆன்மீகம் இந்தக் கோணத்தில் சிந்திக்க சிந்திக்க, தேடிக் கொண்டிருக்கிற எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்கும். இல்லைன்னா வெறும் கேள்விகள் தான். பதில்கள் கிடைத்தாலும் நீங்கள் satisfy ஆக மாட்டீர்கள்.

About The Author