லக… லக… ஜோக்ஸ் (47)

நண்பர் – 1: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது தெரியுமா?

நண்பர் – 2: டாக்டரோட செலவையெல்லாம் நீங்க ஏன் செய்யறீங்க?

                                                                         *****

நோயாளி: நீங்க இந்தக் கிளினிக்கை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை.

டாக்டர்: நானும் அப்படித்தான் இந்தக் கிளினிக்கை ஆரம்பிச்சதில இருந்து, உங்களைத் தவிர வேற யாருக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை.

                                                                       *****   

மனைவி: டாக்டர் எழுதிக் கொடுத்ததில மேலே இருக்குற ஒரு மருந்து மட்டும் இல்லையாம்.

கணவன்: அடிப்பாவி! அது என் பேருடி!

                                                                       *****

நோயாளி: டாக்டர்! எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு.

டாக்டர்: அதை நீங்க சொல்லவே வேண்டாம். என்கிட்டே வந்ததிலிருந்தே தெரியுது.

                                                                     *****

நோயாளி: டாக்டர்! மயக்க ஊசி போடாமலே ஆப்ரேஷன் செய்றீங்க! எனக்குப் பயங்கரமா வலிக்குது!

டாக்டர்: கொஞ்சம் பொறுத்துக்குங்க! இதோ இப்ப முடிஞ்சுடும்!

                                                                   *****                    

About The Author