அதிரூபவதிக்கு…(2)

நீ
தேவதைகளின் தேவதை
என்றெல்லாம்
உன்னிடம் பொய்
சொல்லத் தெரியாத
எனக்குத்தான்…
நீ என்னுடைய தேவதை என்று
ஊரறிய
உண்மை சொல்லத் தெரியும்.

*****

உன்னைப்பற்றி
எழுதும்பொழுது மட்டும்
அழகாகிப்போகின்றன…
உன்னைப்போலவே
கவிதைகளும்

*****

என்னைப்
பிடிக்காத
உனக்கு
காதலைப் பிடிக்கவும்
வாய்ப்பில்லை

About The Author