கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

இறைவன் இப்படித்தான் கேட்பார்!

நம்மிடம் எவ்வளவு கார்கள் இருக்கின்றன என்றல்ல; அந்தக் கார்களில் வாகன வசதியில்லாத எவ்வளவு பேரை ஏற்றிச் சென்று உதவியிருக்கிறோம் என்றுதான்.

நம் வீடு எவ்வளவு பெரியது என்றல்ல; அந்த வீட்டில் எவ்வளவு பேரை அன்புடன் முகமும் அகமும் மலர வரவேற்ற்¢ருக்கிறோம் என்றுதான்.

நாம் எவ்வளவு வண்ண வண்ண, பகட்டான ஆடைகளை அடுக்கி வைத்திருக்கிறோம் என்றல்ல; ஆனால் உடையற்ற எத்தனை பேருக்கு உடைகளை வழங்கி உதவியிருக்கிறோம் என்றுதான்.

சமூகத்தில் நம் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்தது என்பதல்ல; ஆனால் சமூகத்திற்காக எவ்வளவு தொண்டு செய்தோம் என்றுதான்.

நம்மிடம் உள்ள சொத்து மதிப்பை அல்ல; ஆனால் நாம் அவற்றுக்கு அடிமையாகி விட்டோமா என்றுதான்.

நம்முடைய வருமானம் எவ்வளவு அதிகமானது என்பதையல்ல; ஆனால் அதை சம்பாதிப்பதற்காக எவ்வளவு சமரசங்கள் செய்து கொண்டோம் என்றுதான்.

நாம் எவ்வளவு பதவி உயர்வு பெற்றோம் என்பதையல்ல; எவ்வளவு பேருக்கு பதவியில் உயர்வுகள் பெற உதவி இருக்கிறோம் என்றுதான்.

நம் பதவிகளின் பெருமையை பற்றி இல்லை; நாம் அந்தப் பதவிக்கு எவ்வளவு பெருமை சேர்த்தோம் என்றுதான்.

நம் நண்பர்கள் வட்டாரம் எவ்வளவு பெரிது என்பதைவிட நாம் எவ்வளவு நண்பர்களிடம் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறோம் என்றுதான்.

நம் உடலின் நிறம் சிவப்பா கறுப்பா என்றல்ல; நம் நடத்தையும் செயல்களும் எவ்வளவு நேர்மையாக இருக்கின்றன என்றுதான்.

நம்முடைய சொந்த உரிமைகளுக்காக எப்படிப் போராடினோம் என்பதைவிட மற்றவர்களின் நியாயமான உரிமைகளுக்காக எவ்வளவு முறை குரல் கொடுத்திருக்கிறோம் என்றுதான்.

(கருத்துக்கு நன்றி : Inspirational stories தழுவல் – பெயர் தெரியாதவர் எழுதியது)

About The Author