சாமர்த்திய சதி

பாசாங்குச் சொற்கள்
பரிசுப் பொருட்கள்
பக்குவ விளக்கங்கள்
பரம்பரைச் சாயங்கள் –என
எந்நாளும்
உனக்கொரு கத்தி
கிடைத்து விடுகிறது

என்
சிறகுகளின் வளர்ச்சியை
வெட்டி எறிய!

About The Author