பொரி உருண்டை

தேவையான பொருட்கள்:-

பொரி – 1 கப்
வெல்லம் -1 கப்
தேங்காய்(சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்) 1/4 கப்
ஏலப்பொடி -1 தேக்கரண்டி
சுக்குப்பொடி -1 தேக்கரண்டி

செய்முறை:-

  • அவல் பொரி, நெல் பொரி, முட்டைப்பொரி, கடலை அல்லது பொட்டுக்கடலை எதுவாக இருந்தாலும் முதலில் தூசி நீக்கி சுத்தம் செய்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தூளைப் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வெல்லம் தண்ணீருடன் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விடவும்.
  • வெல்லத் தண்ணீரை வடிக்கட்டியின் மூலம் கல்,மண் நீங்குமாறு சுத்தம் செய்யவும்.
  • அவ்வாறு சுத்தம் செய்ததை மீண்டும் அடுப்பில் ஏற்றவும். கெட்டிப்பாகு பதத்தில் வந்தவுடன் தேங்காய், ஏலப்பொடியும், சுக்குப்பொடியையும் போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • (பாகு கொதித்து குறைய ஆரம்பிக்கும் போது ஒரு பாத்திரத்து தண்ணீரில் பாகை சிறிதளவு ஊற்றி கைகளால் உருட்டினால் நன்கு கெட்டியாக உருட்ட வருவதே கெட்டிப்பாகு என்ற பதமாகும்.)
  • பிறகு தட்டில் வைத்திருக்கும் பொரியின் மீது சிறிது சிறிதாக ஊற்றியாவாறே கரண்டியினால் சேர்த்து கலக்கவும். கையில் சிறிது நெய்யோ அரிசிமாவோ தடவிக்கொண்டு சூடு ஆறுவதற்கு முன் உருண்டைகளாக பிடிக்கவும்.

About The Author