வண்ணச் சிதறல் 2013 – சென்னையில் பள்ளிகளுக்கிடையிலான மாபெரும் வரைகலைப் போட்டி

அன்பார்ந்த வாசக நெஞ்சங்களுக்கு,

ஸ்டெப்ஸ் பவுண்டேசன் நடத்தும் சென்னைப் பெருநகருக்கு உட்பட்ட பள்ளிகளுக்கிடையிலான வரைகலைப் போட்டி ‘வண்ணச் சிதறல் 2013’, சென்னை எழும்பூர் அரசு நுண்கலைக் கல்லூரியில் சென்ற வாரம் குடியரசு தினத்தன்று (26.1.2013) நடைபெறுவதாக இருந்தது. இது பற்றிய செய்தி ஏற்கெனவெ நிலாச்சாரலில் வெளிவந்திருந்தது.

காண்க.
https://www.nilacharal.com/ocms/log/vanna_chidaral_2013.asp

தவிர்க்க இயலாத காரணங்களால் அன்று நடைபெறாமல் போன போட்டி, வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது. இது பற்றிய சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப் பெற்றிருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வரும் ஞாயிறன்று (3.2.2012), ராமாபுரம் மியாட் மருத்துவமனை(Miot Hospital)யின் பின்புறம் அமைந்துள்ள டாக்டர்.விமலா கான்வென்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

அனைவரின் மனங்கவர்ந்த திரையுலகின் பவர் ஸ்டார் டாக்டர்.சீனிவாசன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தேறி வருகின்றன.

அனைவரும் வருக!

அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் காண..
https://www.nilacharal.com/download/vanna_chidaral_2013_invitation.pdf

முகவரி :
Dr.VIMALA CONVENT-MATRICULATION HIGHER SECONDARY SCHOOL
AMMAN NAGAR,
WEST K.K.NAGAR,
CHENNAI – 78.
Landmark : Backside of MIOT Hospital, Rampuram

தொடர்புக்கு : ஸ்டெப்ஸ் பவுண்டேசன் நிர்வாகத்தினர் – 97899 75489, 87544 69130, 78716 80027

About The Author