பாபா பதில்கள்-சுயநலம் விடு சுயதரிசனம் பெறு

சுயநலம் விடு சுயதரிசனம் பெறு

நீங்கள் உங்கள் சுயநலத்திலிருந்து விடுபடுகிற போது அது உங்களுடைய சுயதரிசனத்திற்கான மிகப் பெரிய ஒரு வழியாக அமையும். சுயதரிசனத்திற்கு சுயநலம்தான் தடையாக இருக்கிறது. ஐயுணர்வு எய்திய கண்ணும் பயன் இல்லை.

கண், காது, வாய், மூக்கு, போன்ற உறுப்புகளால் பெறுகிற உணர்வுகள், மெய் உணர்வு இல்லாதவர்க்கு இவை இருந்தால் கூட பயன் இல்லை. மெய்யுணர்வு என்பது என்ன? பார்த்தலும், தொடுதலும், சுவைத்தலும் இருந்தால்தான் மெய் இருப்பது நிரூபணம் ஆகிறது. எல்லாம் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்தால் நமக்கு பஞ்சபூதங்களும் இருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. அந்த உணர்வு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, அந்த மெய், பொய் என்று தெரிந்து கொள்வது தான் மெய்உணர்வு. முதலில் இந்த மெய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது.

இந்த மெய்யானது உலகத்திலே இருக்கிற மற்ற ஜீவராசிகளிடத்தில் இருந்தும், பறவைகளிடத்திலிருந்தும் பரிணாம வளர்ச்சியில் எந்த வகையில் மாறுபட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது.

தேகத்தை தியாகம் செய்

உலகத்திலேயே மிகப்பெரிய தியாகம் தன்னுடைய தேகாபிமானத்தை விட்டு ஒழிப்பதுதான். தேகம் இருக்கிறவரைதான் ஏழை, பணக்காரன். தேகம் இருக்கிறவரைதான் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன். தேகம் இருக்கிற வரைதான் ஆரோக்கியம்-ஆரோக்கியம் இல்லை. தேகம் இருக்கிற வரைதான் இளையவன்-வயசானவன், ஆண்-பெண் எல்லாம். இந்த தேகம், தேகம் சம்பந்தப்பட்ட அபிமானத்தை முழுதுமாகத் தியாகம் செய்துவிட்டால், எதுவும் இல்லை.

தேகாபிமானம் இருக்கற வரைக்கும் ஒரு ஜட்ஜ்மெண்ட் இருக்கும். இது நல்லது, இது கெட்டது; இது பாவம், இது புண்ணியம் என்று தோன்றிக் கொண்டேயிருக்கும். ராமனுக்குக் கூட நல்லது, கெட்டது தெரிஞ்சது. ஆனா கிருஷ்ணன் என்ற evolution வந்தவுடனே நல்லது, கெட்டது இரண்டையும் தாண்டிவிட்டான். ஆத்மாவினுடைய பரிணாம வளர்ச்சியில் he went beyond judgements. எந்த ஜட்ஜ்மெண்டும் கிடையாது. பாவமும் கிடையாது, புண்ணியமும் கிடையாது.

About The Author

1 Comment

Comments are closed.