பாபா பதில்கள் – ஜெபம்

ஜெபம்

எண்ணங்களுடைய ஆற்றலை குவிக்கிறபோது ஒரு விளைவு வருகிறது. ஒரு பேப்பர் இருக்கு. அதை சூரியனுக்கு நேராகப் பிடிச்சா எரிய மாட்டேங்குது. ஆனால் இந்த பேப்பர் கிட்ட ஒரு லென்சை பிடிச்சோம் என்று வெச்சுக்கோ. அந்த சூரியனுடைய ஒளிக்கற்றைகள் லென்ஸ் வழியாக அந்த பேப்பரை சுட்டு கறுப்பாக ஒரு வட்டம் வேறு வருகிறது. அப்போ அந்த ஒடுக்கம் வருகிற போது அதில் ஒரு ஆற்றல் வெளிப்படுகிறது. எங்கேயோ இருக்கிற சூரியன் ஒளிக்கற்றை வெச்சு ஒரு பேப்பரை பற்ற வைக்க முடிகிறது. அந்த மாதிரி நம்ம உடம்பில் மின்காந்த அலைகள் இருக்கின்றன. Electrical energy flow ஆகிகிட்டு இருக்கு. இதை எவனொருவன் குவித்துக் கொண்டு வரானோ அது புருவ மத்தியில் சேர்கிறபோது அவங்களுக்கு ஒரு ஆற்றல் கிளம்புகிறது. அந்த உடம்பில் இருக்கிற கரெண்ட் வெளிப்படுகிறது. அந்த மாதிரி ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு லென்ஸ் மாதிரிதான் ஜெபம் என்பது.

2 கல் இருக்கு. பார்த்தால் நெருப்பு வருமா என்று சந்தேகமா இருக்கு. ஆனால் 2 கல்லை சிக் சிக் என்று தேய்க்கிறபோது நெருப்பு பறக்குது பார்த்தியா. அந்த மாதிரி ஒரே விஷயத்தை உடம்புக்குள்ளே கொண்டு வரபோது இந்த எண்ணங்கள் ஒளிமயமாகின்றன.So, ஜெபம் என்பது நம் உடலில் இருக்கிற மின்காந்த ஆற்றலை ஏதாவது ஒரு யுக்தியினாலே- மந்திரமா இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை நினைச்சுட்டு இருக்கலாம் அல்லது எதுவுமே இல்லாமல் blank-ஆக இருந்து மூச்சுக் காற்றை ஒடுக்கறதுனால இருக்கலாம். அந்த மாதிரி எல்லாம் செய்கிறபோது அந்த எண்ண ஒடுக்கம் வருகிறது. அந்த பயிற்சிதான் ஜெபம் என்பது.

தியானம்

தியானம் என்பது அந்த ஜெபத்தினுடைய விளைவு. ஒரு சாமியார் காட்டில் உட்கார்ந்து இருந்தார். ஒரு பணக்காரன் அந்த வழியாக குதிரை மேல போய்கிட்டு இருந்தான். சாமிகிட்ட சொன்னான், சாமி எனக்கு ஏதாவது 2 நல்ல வார்த்தையா சொல்லுங்கோ என்று. சாமி சொன்னார், மௌனம் என்று. என்ன சாமி சட்டு புட்டுனு சொல்லிட்டீங்க. எனக்கு இன்னும் 10 நிமிஷம் டைம் இருக்கு என்றான். அவர் சிரிச்சுட்டு சொன்னாராம், தியானம் என்று. இன்னா சாமி இவ்வளவு சீக்கிரம் சொல்லீட்டீங்க. வேற ஏதாவது சொல்லுங்கன்னானாம். சிரிச்சுட்டே சாமி சொன்னாராம், நான் result-யையே கொடுத்துட்டேன். அப்புறம் steps பத்தி கேக்கறயேனு. வாழ்க்கையினுடைய ரிசல்ட் மௌனம். சும்மா இரு. சொல்லற எல்லாமற எனை மறந்த நலம். யானாகிய என்னை விழுங்கி தானாய் தனி நிற்கிற தற்பரம். எட்டாத பேரின்பம் எனை விழுங்கி நிற்கின்ற ஆனந்தம். இதுதான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் சொல்றது. அந்த மாதிரி சும்மா இருக்கக்கூடிய நிலை இருக்கிறதல்லவா அதுதான் ரிசல்ட். நீ எந்தப் பயிற்சிக்கு போனாலும் ரிசல்ட்- எண்ணங்களற்ற நிலை. எந்த எண்ணமும் இருக்கவே கூடாது. வெள்ளை திரையாய் blank ஆய்டணும். அதில் எந்த சினிமாவும் வரக்கூடாது. அதுக்கான வழிமுறை இருக்கே அதுதான் தியானம். அந்த எண்ணங்களற்ற நிலைக்கு உன்னை கொண்டு போகிற training programme இருக்கே, crash programme for mental silencing that is called தியானம்.

About The Author