நீர் வளம் காப்போம்! (2)

குளியலறையில்:

1. பல் துலக்கும் போதும், முகச் சவரம் செய்யும் போதும் தண்ணீர்க் குழாயை திறந்து விட்டுச் செய்யாமல் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்.

2. ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்துங்கள்.

3. டாய்லெட்டில் நீர்கசிவு உள்ளதா என அவ்வப்போது பரிசோதியுங்கள்.

4. தேவையில்லாமல் டாய்லெட்டில் டிஷ்யூ, சிகரெட் போன்றவற்றைப் போட்டுத் தண்ணீரை வெளியேற்றுவதைத் தவிருங்கள்.

5. குற்றால அருவியில் குளிப்பதாய் நினைத்துக் கொண்டு ஷவரில் தண்ணீரை திறந்து விடாமல் குளிப்பதற்குக் குறைந்த அளவு தண்ணீரையே பயன்படுத்துங்கள்.

6. உங்களின் பழைய குளியலறை, டாய்லெட் போன்றவற்றைக் குறைவான நீரை பயன்படுத்தும்படியான புதிய முறைகளில் மாற்றி அமையுங்கள்.

7. டாய்லெட்டின் flapper சரியாக வேலை செய்கிறதா என அடிக்கடி பரிசோதியுங்கள்.

8. குழந்தைகளை உங்களுடனே குளிக்க வைக்கும் போது தண்ணீர் பயன்பாடு குறைக்கப்படும்.

9. நீங்கள் தலைக்குக் குளிக்கும் போது ஷாம்பூ தேய்க்கும் போது ஷவரை மூடிவிடுங்கள்.

10. ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் போதும், வீடுகளிலும் ஒருமுறை பயன்படுத்திய துண்டுகளைத் துவைக்கப் போடாமல் ஒரு சில முறைகள் பயன்படுத்துங்கள்.

11. ஷவரில் சுடுதண்ணீர் வரும் வரை திறந்துவிடும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் பிடித்து டாய்லெட்டுக்கும், செடிகளுக்கும் பயன்படுத்துங்கள்.

12. கைகழுவும் போது மடமடவென தண்ணீரை திற்ந்து விட்டு வீணாக்காதீர்கள்.

துணி துவைக்கும் போது:

1. மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை பயன்படுத்துங்கள்.

2. குழாயைத் திறந்து விட்டுவிட்டு துணிகளை அலசாமல் ஒரு பக்கெட்டில் நீரைப் பிடித்து வைத்து அலசுங்கள்.

3. முழு அளவு துணிகள் சேர்ந்த பின்பே அவற்றை வாஷிங் மெஷினில் துவையுங்கள்.

சமையலறையில்:

1. பாத்திரங்களைத் துலக்கும் போதும் குழாயைத் திறந்துவிட்டு தண்ணீரை வீணாக்காதீர்.

2. பழங்கள், காய்கறிகள் கழுவப் பயன்படுத்திய தண்ணீரை பூந்தொட்டிகள், அலங்கார செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

3. பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் எடுத்துச் சென்ற தண்ணீர் மீதமிருந்தால் கீழே ஊற்றாமல் செடிகளுக்கு ஊற்றுங்கள்.

4. பாத்திரங்களை கழுவும் போது ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதிலிருந்து தண்ணீரை அள்ளி கழுவும் போது குறைவான அளவு நீரே செலவாகும்.

5. முழு அளவு பாத்திரங்களையே எப்போதும் டிஷ்வாஷரில் பயன்படுத்துங்கள்.

6. பதப்படுத்த, குளிர்விக்கப்பட்ட பொருட்களை அறை வெப்பநிலைக்கு கொண்டு வரத் தண்ணீர்க் குழாயில் பிடிக்காமல், மைக்ரோவேவில் சூடேற்றி பயன்படுத்துங்கள்.

7. குழாயைத் திறந்துவிட்டு கழுவுவதற்குப் பதில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி ஒரே சமயத்தில் பழங்கள், காய்கறிகளை கழுவுங்கள்.

8. உடனடியாக சுடுநீர் தரும் வாட்டர்ஹீட்டரை பயன்படுத்துவதன் மூலம் மின்சக்தியையும், தண்ணீரையும் சேமிக்கலாம்.

9. ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும், அதை கழுவுவதற்க்கும் குறைவான நீரே தேவைப்படும்.

10. ஜஸ்கட்டிகளைத் தெரியாமல் தவறவிட்டுவிட்டால் அவற்றை வீணாக்காமல் செடிகளுக்கு தண்ணீருக்குப் பதில் ஜஸைக் கொடுங்கள்.

11. தொங்கும் பூந்தொட்டிகளுக்கு தண்ணீருக்குப் பதில் ஜஸ் கட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் அதிகமான தண்ணீர் வீணே கீழே கொட்டுவதைத் தவிர்க்கலாம்.

12. தண்ணீர் வரும் குழாய்களுக்குச் சரியான இன்சுலேஷன் பயன்படுத்துவதன் மூலம் சுடுதண்ணீர் வேகமாக வர வழி செய்து, நீர் வீணாவதைத்தடுக்கலாம்
13. மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது தொட்டியிலிருந்த நீரை செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

About The Author

12 Comments

  1. indhumathi

    ஆரோக்கியம் செல்வம் மற்றும் ஆனந்தம் காண 5 வழிகள் .மைக்கோஎன்னும் ஜப்பானிய புத்தமதவாதி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஜப்பானியரின் காதுகல்ளி qqqqqdx

  2. indhumathi

    ஆரோக்கியம் செல்வம் மற்றும் ஆனந்தம் காண 5 வழிகள். மைக்கோ என்னும்ஜப்பானிய மதவாதி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஜப்பானியரின் காதுகளில் நூதனமாகத் தெரியும் ரேக்கி என்ற எளிய புதிர் நிறைந்த மருத்துவ முறையை கண்டுபிடித்தார்.ரேக்கி என்ற வார்த்தை பேய் என்று பொருள்படுவதால் சில ஜப்பானியர் இந்த வார்த்தை பிரயோகத்திற்கு அஞ்சுவர். மேற்கத்திய நாடு களின் ஆன்மீக மருத்துவமுறை பின்பற்றுபவர்களாஆல் இந்த வார்த்தையின் பொருள்பற்றி கவலைப்படாமல் இந்த ரேக்கி முறைஎல்லா பகுதிகளிலும் பரவலாக அறியப்படுகிறது.

  3. indhumathi

    சிரிஜோ அஃயாசி என்பரிடம் இருந்து கற்று கொண்ட அவாயோ தாக்காடா என்ற அவாலியன் பெண்மணி 1940களில் அவாயில் ரேக்கி முறையை ஆரம்பித்துவைத்தார்.இக்குறிபிட்ட காலவரையில் திருமதி டாக்காடா அவாய் பெர்ல் என்ற துறைமுகத்தில் இருந்தபோது புத்த மற்றும் கின்டோ வேர்களின் முறையை உணர்த்திபெரும்பாலான அமெரிக்கர்களின் எதிர்மறை உணர்ச்சிகளை எடுப்பதற் கு இம்முறையினை பின்படுத்தியது ஆச்சர்யப்படத்தக்கதல்ல.சிகாகோவில் படித்த யுசிசென்சாய் என்ற கிறித்துவ பிட்சுவின் கருத்தும் டாக்காவின் கருத்தும் முழுமை பெறவில்லை இந்த கால கட்டத்தில் கூட ரேக்கி உலகம் முழுமையும் பரவியிருந்தாலும் சரியான பின்பற்றுதலை பயிற்சியாளர்கள் பின்பற்ற முடியவில்லை

  4. i

    1980 ஆண்டு தொடங்கி திருமதி டாக்காவின் பயிற்சி முறைகளே ஐரோப்பா கண்டத்தில் அறிந்து பயிற்றுவிக்கப்பட்டது.ஜெர்மனிய பேராசிரியை ஒருவர் ஜப்பானுக்கு ரேக்கி கற்று கொடுக்கும் வரை டக்காவின் முறைகளே அங்கு தெரியும்.ஜெர்மானிய ஆசிரியர் டாக்காவின் கருத்துக்கு எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட ரேக்கி ஜப்பானில் இருப்பதை கண்டறிந்த போது அவர் ஆச்சர்யப்பட்டார். டாக்காடா தான் மட்டுமே உலகில் ஒரெ ரேக்கி ஆசிரியர் என்றும் தன்னை உயர்ந்த ஆசிரியரெனவும் கூறிக்கொண்டார்.. இந்த விருது யுசிசென்சாய் தன்னையும் கூறிகொண்டதில்லை வேறு ஒருவருக்கும் வ்ழங்கியதில்லை.இநத நாட்களுக்குப் பிறகு ரேக்கியின்
    கண்டுபிடிப்பாளர் சுசென்சய் பற்றியும் ரேக்கியின் மூலாதார உண்மைகள்
    வெளிவரத்தொடங்கின.யுசிசென்சய்ன் கண்டுபிடிப்புக்களை காக்க டோக்கியோவில்
    ஆரம்பிக்கப்பட்ட யுசிகாக்காய் என்ற நிறுவனம் மேற்கத்தியர்களுக்கு இன்றுவரைதாழ் திறவாத கதவாகவே உள்ளது.21 வது நூற்றாண்டு தொடங்கி ரேக்கி எப்படி மனித இனத்திற்கு சேவை செய்ய முடியும் என்ற பரந்த கருத்துக்களை மேற்கத்தியரின் பயற்சியாளர் மற்றும் ரேக்கி முறையில் மருத்துவம் செய்வோர்களுக்கு அறிந்தவற்றை ஒட்டியதாக டோயிகிரொகி ரேக்கிஅல்லது இனமொட்டொ நிறுவனர் காம்யொசெயிகிகாம் போன்ற ஜப்பானிய ஆசிரியர்கள் கருத்துக்களை ஆதாரமாக கொண்ட நிறைய ஒற்றுமைகளை காட்டுகின்றனர்.

  5. indhumathi

    நட்புமுறை என்ற 2004ல் ஆரம்பிக்கப்பட்ட ரேக்கி `இம்ணையதள பள்ளியின் மூலம் அந்த பழைய முறை உகந்ததாக உள்ள உண்மையினை நாம் அறியலாம்.`1.இன்று மட்டும் —– கோபப்படக்கூடாது.இந்த முதல் படி சற்றே சிரமமானதே.

  6. indhumathi

    அதுவும் மேற்க்கத்திய கலாசாரத்தில் எளிதாக வழக்கமாக கோபப்படும் நம்மை சினம் உள்ளேயே எரித்து நமது வாழ்நாளையே பயமுறுத்திவிடும். எனவே சினம் காப்பது என்பது நமது ஆடம்பர வாழ்வின் வழிகாட்டி அல்ல.நமது வாழ்வின் ஆதாரஸ்ருதி வாழ்நாளை கூட்டும் ரகசிய மருந்து.எனவே இணைய தளத்தில் ரேய்க்கிபடிக்கும் முன் கடைபிடிக்கும் முதல் விதி சினம் காப்பதே.வாழ்நாளை சுருக்கும் சினம்காத்தலேமுதல் விதி ஆகும்.கோபத்தை பல முறை தடுப்பதற்கு சிலௌ வழிமுறைகளை ரெய்க்கி கற்றுதருகிறது.

  7. indhumathi

    2.இன்று மட்டும் —–கவலைப் படக்கூடாது.அடுத்த மிகப் பெரிய காரியம் சுயமுன்னேற்ற பயிற்சியிகளில் கவலைப் படுவது ஆக்கப்பூர்வமான சிந்தனையை எப்படி எதிர்மறை படுத்தும் என்பதனை நாம் அறிவோம்.சரியான முறையில் இந்த எதிர்மறை சிந்தனையை நாம் வாழ்வில் தோல்விகளை சந்திப்பது என்பது நிச்சயம் மறுபடியும்மறுபடியும் நாம் அறிய வேண்டியது.. நம்மை கவலைகள் தின்ன நமது ஆதாரன ஆரோக்கியசெல்வம் பொருள் செல்வம் ஆகியவற்றை இழக்க காரணமாய்விடுவோம் என்பதை உணரவேண்டும்.

  8. indhumathi

    3.இன்று மட்டும்—– நன்றி என்பதை நாம் உணர்ந்தால் எந்த காரியத்திற்கு நன்றி செலுத்த விரும்புகிறோமோ அந்த செய்கையின் முதலாளி நாமாகி விடுவோம்.எனவே நன்றியுணர்வுடைய எந்த ஆகர்௯ணமும் நம்மை ஆரோக்கியம், செல்வம்,ஆனந்தம் மற்றும் வெற்றிப்படிகளில் ஏற்றிவிடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.ரெய்க்கி படிக்க வேண்டிய 3-வதுகாரணம் தினசரி நன்றியுடையவர்களாக மாறுதலே.. இது ஒவ்வொரு நாளும் தொடர வேண்டும், இழக்கக்கூடாது என்ற உணர்வை நமக்கு உண்டுபண்ணும்.

  9. indhumathi

    4.இன்று மட்டும்——– உனக்காக கடுமையாக உழை.இதுவும் முதல் மூன்று விதிகளைப் போல் இன்றியமையாததுடன் சற்றே கடினமானதும் கூடத்தான். நாம் நமது பொறுப்புக்களை 100சதவீதம் நிறைவேற்றாவிடில் நாம் எதைச் செய்ய வேண்டுமென இங்குள்ளோமோ அது நிறைவேறாது. நமக்கு ரொம்ப முக்யமானவர் யார் என்பதை நிர்ணயிக்காவிடில் இந்த விதி அடிபட்டுப்போகும்.நாம் தான் நமக்கு முக்கியம் மற்றவர்களுக்காக என்பது தோல்வியைத்தரும்.நாம் நமது பொறுப்புக்களை சுமந்து கடமையை சரிவர செய்யாது பொறுப்புக்களை அலட்சியப்படுத்தினால் நாம் எதிர்பார்த்த வெற்றியை முழுமையாகப் பெற முடியாது.

  10. indhumathi

    4.இன்று மட்டும்——– உனக்காக கடுமையாக உழை.இதுவும் முதல் மூன்று விதிகளைப் போல் இன்றியமையாததுடன் சற்றே கடினமானதும் கூடத்தான். நாம் நமது பொறுப்புக்களை 100சதவீதம் நிறைவேற்றாவிடில் நாம் எதைச் செய்ய வேண்டுமென இங்குள்ளோமோ அது நிறைவேறாது. நமக்கு ரொம்ப முக்யமானவர் யார் என்பதை நிர்ணயிக்காவிடில் இந்த விதி அடிபட்டுப்போகும்.நாம் தான் நமக்கு முக்கியம் மற்றவர்களுக்காக என்பது தோல்வியைத்தரும்.நாம் நமது பொறுப்புக்களை சுமந்து கடமையை சரிவர செய்யாது பொறுப்புக்களை அலட்சியப்படுத்தினால் நாம் எதிர்பார்த்த வெற்றியை முழுமையாகப் பெற முடியாது.

  11. indhumathi

    5.இன்று மட்டும்——-அனைவரிடத்தும் அன்பாக இருத்தல்.இது முதலில் என்னிடமிருந்து ஆரம்பிக்கவேண்டும்.நான் என்னிடத்தில் அன்பாக நட்பாக அனுசரணையாக இல்லாவிடில் மற்றவர் மீது காட்டும் அன்பும் உயிரற்றதாக பொருளற்றதாகவே இருக்கும்.இணையத்தின் மூலம் நம்மீது அன்பு செலுத்தவும், ரெய்க்கி மாணவரிடையே அன்பினை வளர்க்கவும் நாம் தினமும் வாய்ப்பினைப் பெறலாம்.

  12. indhumathi

    வார இறுதி வகுப்புக்களை விட இணையதளத்தில் ரெய்க்கி வகுப்புக்கள் பயிற்சியும் மாதமொருமுறை சந்திப்பதும் நம்மை திறமை வளர்ப்பவர்களாக, சாதனை உருவாக்குபவர்களாக மாற்றக் கூடியது என்பது தெளிவாகப் புரியும்.யூஸீ ஸென் சாய் போதித்த ரெய்க்கி பயிற்சிகள் நமது தொழில் ஆரோக்கியம் மற்றும் எந்தவொரு மனித இன முயற்சியையும் பரிமளிக்க உதவக்கூடிய வகையில் தினம் நாம் கடைபிடிக்க நம்மை ஆர்வப்படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Comments are closed.