ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்!

ராமர் பாதம் பதித்த ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் பரவி உள்ளதை முந்தைய  இதழ் ஒன்றில் படித்தோம். தமிழ் நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டே ராமர் வாழ்ந்தது உண்மைதானா என்று கேள்வி எழுப்புவோருக்கு தமிழ் இலக்கியம் என்ன பதில் தருகிறது?
உலக இலக்கியங்களில் சங்க இலக்கியம் மிகவும் பழமையானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று பெரும் சங்கங்கள் தமிழ் இலக்கிய வளத்தின் செழுமைக்குத் தக்க சான்று!

ராமர் ஒரு புனைகதைப் பாத்திரமா அல்லது ஜீவனுள்ள ஒரு உண்மை நாயகனா என்பதற்கு சங்க இலக்கியம் அற்புதமான பதிலைத் தருகிறது.

புறநானூறின் 378ம் பாடல்

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொ ழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதிய இந்த அரிய பாடலின் சாரம் வருமாறு:

தென் பரதவரின் குறும்புகள் அடங்க, வட வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க, அவரை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்! இச் சோழனின் நெடு நகரிலே, வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று என் கிணையை இயக்கி, எஞ்சா மரபினனான சோழனின் வஞ்சிச் சிறப்பைப் போற்றிப் பாடினேன். எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு ஏராளமாக அளித்தான். அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன். அவர்கள் கண்டு திகைத்தனர்! விரலில் அணிவன செவியிலும், செவியில் அணிவன விரலிலும், அரைக்குரியன கழுத்திலும், கழுத்திற்கு உரியன இடையிலுமாக மாறி மாறி அவர்கள் அணிந்தனர்! அவரது செயலைக் கண்டவர் கைகொட்டி நகைத்தனர். ‘சீதையின் அணிகளை கண்ட குரங்கினம் அணிந்ததென’ இராமாயணத்தில் சொல்லப்படும் தன்மை போலிருந்தது அந்தக் காட்சி!

என் சுற்றத்தின் வறுமையும் தொலைந்தது! அவர் முகத்தில் நகையும் அரும்பிற்று.

பழமையான சங்க இலக்கியம் வழக்கில் இருந்து வரும் ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டி நகைச்சுவையுடன் ‘குரங்குகள் சீதையின் ஆபரணங்களை மாறி மாறி அணிந்தது போல என் உறவினரும் மாறி மாறி அணிந்தனர்’ என்று கூறுவது பொருள் பொதிந்த ஒன்று.

அகநானூறு 70ம் பாடல்

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே (அகம் 70 – வரிகள் 13 முதல் 17 வரை)

இராமன் அரக்கரை வெல்லுதற்குச் செய்யும் போர் பற்றிய அரிய மறைச் செய்தியை வானர வீரர்களோடு ஆராய்தற்பொருட்டுக் கோடிக்கரையில் பல விழுதுகளுடைய ஆலமரத்தின் கண் பறவைகள் ஆரவாரிக்கும் ஆரவாரத்தைக் கைகவித்து அவித்தனன் என்பது மேற்கண்ட பாடல் தரும் அற்புதச் செய்தி.

நடந்திருந்தாலன்றி இப்படிப்பட்ட புனைகதைகள் வழக்கில் வர முடியாது; அதிலும் பாடலில் மேற்கோளாக இடம் பெற முடியாது. தனுஷ்கோடியை ‘தொன் முது கோடி’ என்று பாடல் கூறுவது மிகவும் ஆழ்ந்த பொருளைத் தருவதாகும்.

‘காலம் காலமாக இருந்து வரும் கோடி’ என்ற அர்த்தத்தை உற்று நோக்கினால் எல்லையில் காலம் முன்னர் நடந்த அரிய சம்பவமும் அது சார்ந்த இடமும் நமக்குப் புலனாகும்.

கலித்தொகை தரும் இராவணன் பற்றிய தகவல்

இது தவிர கலித்தொகை பாடல் 139ல் 33 முதல் 37 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்:

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல"

இந்த வரிகள் அரக்கர் கோமானான பத்துத் தலை இராவணன் இமய மலையை எடுத்ததை அழகுறக் கூறுகிறது. ஆக, இப்படி இராவணன் இமைய மலை எடுத்தது, இராமன் தனுஷ்கோடியில் ஆலோசனை செய்தது, குரங்குகள் சீதையின் ஆபரணங்களை இடம் மாறி அணிந்தது போன்ற செய்திகள் சங்க இலக்கியத்தில் அழகுற ஆங்காங்கே தக்க இடத்தில் அமைந்துள்ளன.

இராமன் வாழ்ந்தாரா என்ற் கேள்விக்குச் சங்க இலக்கியம் தரும் பதில் இது!
.

சேது என்ற சொல்லின் பொருள்

சேது என்பது ஒரு பழமையான வடமொழிச் சொல். இதன் பொருள் அணை என்பதாகும். இதை ‘ஸஹ இதும் கந்தும் ஷக்யதே அனேனேதி ஸேது:’ என்ற பழமையான சொற்றொடரால் அறியலாம்.

இதுவே கரைகளை உடைத்து நீர் வெளிவராமல் இருக்கும் கரைக்கும் உரித்த சொல்லாக ஆகிறது. ஆகவேதான், ‘நிஸ்ஸேது’ என்ற சொல் சமூக மற்றும் கௌரவத்திற்குரிய சட்டங்களை உடைப்பவனையும் குறிக்கும் சொல்லாக ஆனது.

இமயம் முதல் சேது வரை ஒரே பாரதம்!

ராமர் அமைத்த சேதுவைக் காக்கும் உரிமை தமிழக மன்னர் குலமான சேதுபதிகளுக்கு உண்டு. அவர்களின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது; மரியாதைக்குரியது. ராமர் ஸ்தாபித்த சேது சமஸ்தானத்தின் முதல் சேதுபதி முதல் இன்றைய சேதுபதி வரை ராமர் பாலத்தை அவர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். கி.பி.1605ம் ஆண்டிலிருந்து சேதுபதி வம்சத்தின் ஆதாரபூர்வமான வரலாறு நமக்கு இன்று கிடைக்கிறது.

இந்தக் குறுகிய சுமார் 400 ஆண்டுகள் வரலாறை அலசி ஆராய்ந்து பார்த்தாலும் முழு பாரத தேசமே சேதுவின் மீது கொண்ட பக்தி எவ்வளவு என்பதை விளக்கும். சங்க இலக்கியம் இமயமலையை எடுத்த ராவணனையும் குறித்தது. கோடிக்கரையில் ராமனின் சேது பற்றிய ஆலோசனையையும் குறிக்கிறது.

தமிழின் சங்க இலக்கியத்தைத் தவிர, "ஆ ஸேது ஹிமாசல" – இமயம் முதல் சேது வரை என்ற சொற்றொடரை – ஒரே பாரதம் என்ற ஒற்றுமைத் தொடரை – வேறு எந்தப் பழமையான இலக்கியத்தால்தான் நிரூபிக்க முடியும்!?

(நன்றி : ஆதிப்பிரான்)”

About The Author

21 Comments

  1. Dr. S. Subramanian

    Good analytical writing! Although sangam literature is hard to understand, the evidence for the references to Ramayanam in such songs is compelling. The only connecting link could be the migration of Jains and Buddhists who brought the stories of Ramayanam with them when they came down south in the years before the common era (BCE). iLangO aDigaL talks about the avatArams of VishNu (courtesy of Jain saints) and the miracles performed by Krishna in SilappadhikAram. He talks about Rama too and his conquest of Lanka in Aycciyar Kuravai.

  2. சித்ரா

    அருமையான ஆராய்ச்சி.வாழ்க உங்கள் பணி!

  3. arima elankannan

    தமிழ்௯ இலக்கியத்தில் பல்வேறு சான்றுகள் உள்ளன.

  4. S.Kasivelu

    Dஎஅர் ணகரஜன்,
    Yஒஉர் சுர்வெய் ஒf Tஅமில் லிடெரடுரெ ஒன் கிச்டொரிcஅல் ஔதென்டிcஇட்ய் ஒf ளொர்ட் றம் இச் தொஉக்க்ட் ப்ரொவொகிங்,ஈட் இச் நொட் தெ Jஐன்ச்/Bஉட்திச்ட் ந்கொ ப்ரொஉக்க்ட் தெ ச்டொர்ய் டொ Tஅமில்னடு அச் அல்லெகெட் ப்ய் Dர்.ஸ்.ஸுப்ரமனிஅம் புட் இட் இச் பசெட் ஒன் தெ அcடுஅல் கப்பெனிங்ச் நிட்னெச்செட் ப்ய் Tஅமில் பெஒப்லெ அட் Kஇச்கிந்த / றமெச்நரம் & Dஅனுச்கொடி செவெரல் தொஉசன்ட் யெஅர்ச் அகொ அன்ட் ட்ரன்ச்மிட்டெட் த்ரொஉக்க் தெ (னொந் எ௯டின்cட்) லிடெரடுரெ அன்ட் ஒரல் ட்ரடிடிஒன் டொ தெ லடெர் கெனெரடிஒன். ஈன் திச் cஒன்னெcடிஒன் ஈ நொஉல்ட் லிகெ டொ இன்விடெ யொஉ டொ ப்ரெசென்ட் அ பபெர் ஒன் தெ சுப்ஜெcட் அட் தெ என்சுஇங் செமினர் அட் Cகென்னை 25த்௨7த் ஒர்கனிசெட் ப்ய் Dரவிட ஸன்டொர் Pஎரவை.றெஃஉஎச்ட் உர்கென்ட் ரெப்ல்ய்–Kஅசிவெலு -Dஎவி

  5. தி.தமிழ்ச்செல்வன்

    கட்டுரை மிகவும் சுவையாக இருந்தது. சேது என்பது அணையையும் அதைக்காப்பாற்றுகிற பொறுப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கு சேதுபதி என்ற பட்டப்பெயர் வந்தததிற்கும் காரணம் புரிகிறது. நல்ல ஆராய்ச்சி கட்டுரை. கட்டுரையாளருக்கும் நிலாச்சாரலுக்கும் எனது வாழ்த்து

  6. A.Malaichamy

    மல்லாந்து படுத்துக் கொன்டு மார்பில் துப்பியது போல் இருக்கிரது. நாட்டில் இதுபோல் ஏகப்பட்ட கதைகலுன்டு. பகுததரிவுக்கு ஒவ்வா பல கதைகல் ராமாயனத்தில் உன்டு. இராமனும், இராவண்னும் வாழ்ந்தது உண்மையாகவே இருந்தாலும் இராமாயண்ம் என்பது வெறும் கதையே.

  7. vaduvur ezhil

    தமிழ் நாட்டிற்கு இன்றய தேவை சேது திட்டம் நிரைவேறுவதே அதற்கு தடையாக இருப்பது ராமன் என்ன அது பெரியார் ராமசாமியாக இருந்தாலும் புறக்கனிக்க வேண்டும். சேது திட்டத்திற்கு குறுக்கே நிற்பது ராமனும் அவனது பாலமும்தான் என்றால் அவை தமிழர்க்கு தேவை இல்லை. ராமனை தூக்கிப்பிடிப்பது சங்க இலக்கியம் என்றால் அதுவும் தேவையில்லை.

  8. lakshmi narasimhan

    வடலுர் எழில் பாரத தேசத்துக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தேவை இல்லை

  9. gurumoorthy

    தமிழ் மொழியும் பாரதமும் யராலும் பிரிக்கமுடியாதவை.

  10. Sulaiman sait

    றாமர் பலரால் நம்பப்படும் கடவுல். ஆகயால் அதை பட்ட்ரி நான் கருட்து சொல்லவில்லை. ஆனால் அன்த ஒரு விஷ்யட்துக்காக முழு தமிழ் நாட்டுக்கும் நன்மை பயக்கும் செது சமுட்த்ர திட்டட்திர்க்கு யெதிர்ப்பு தெரிவிப்பது கொஞம் கோட சரி இல்லை. கர்ரன்டுக்காக அனுமின் நிலயட்தை கோட நாம் ஆதரிக்கிரொம். சம்பன்தப்பட்டவர்கல் புரின்து கொல்ல வென்டும்.

  11. சேர்முக பாண்டியன்

    உங்களது ஆய்வு மிகப் புதுமையானது .உங்களது தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  12. balu

    உங்களது தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  13. C.Murugan

    யாரும் பார்க்காத கடவுளுக்கு படிக்காத (பாமரர் யாரும்) இலக்கியத்திலிருந்து புரியாத வார்த்தைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ள அண்ணே! ஏன் இவ்வளவு சிரமப்படுறின்க. காலையில் எழுந்ததில் இருந்து ராத்திரி வரைக்கும் தமிழ் நாட்டில் எல்லோரையும் சாமிக்கு சூடம் காட்ட சொல்லி CM இடம் சொன்னாலே அதிரடியா ஒரு சட்டம் போட்டு எல்லோரையும் சாமிக்கு சூடம் காட்ட சொன்னா பாவம் எல்லோருக்கும் தட்டில் காசு விழுந்து தமிழ் நாடே சுபிட்சம் ஆக இருக்கும்.

  14. vs.samuel

    இராமனுடன் தம்பியும் விந்தியமலைக்கு தெற்கே சீதையை தேடி வந்த போது அவர்கள் கண்டது வானரங்களின் நாடென்று இராமாயாணம் says, if this is so we are all supposed to be the decedents of monkeys, not human beings, now you want us to believe story of raamaayan and the suthu misgivings.
    Come on, there is a limit to FOOL people.

  15. SARAVANAPERUMAL

    கடவுல் ரமனை கரனம் கட்டி செது திட்டம் தடை பட வென்டம்

  16. PRIYAKANNAN

    நல்ல ஆராய்ச்சி கட்டுரை. கட்டுரையாளருக்கும் நிலாச்சாரலுக்கும் எனது வாழ்த்து.

  17. PRIYAKANNAN

    நல்ல ஆராய்ச்சி கட்டுரை. கட்டுரையாளருக்கும் நிலாச்சாரலுக்கும் எனது வாழ்த்து

Comments are closed.