இராசிபலன்கள்(2-2-2015 முதல் 8-2-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்காக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்கும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், வழக்குரைஞர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். வாயு, வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும். பணியில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். புனிதப் பயணம் சென்று வர முயற்சிப்பீர்கள். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். படித்த, வேலை கிடைக்காத இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் கிடைக்கும். எலும்பு, நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்கள் அடைவீர்கள். குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும், கடன் தொல்லைகளும் ஏற்படலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய காலமாகும். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். இரும்பு, இயந்திரம், இரசாயனம் சம்பந்தமான பொருட்கள் விற்பவர்கள், எண்ணெய், பலசரக்கு போன்றவற்றை விற்பவர்கள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுதல், சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் நற்பெயர் எடுப்பீர்கள். நாட்பட்ட பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகச் சுற்றுலாக்களை மேற்கொள்ளுவீர்கள். பூ பழம் பூஜை சம்பந்தமான பொருட்கள் விற்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நறுமணப் பொருள் வியாபாரிகள், கணினித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நாட்பட்ட தீராத வியாதிகள் தீர வேண்டிப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் செலவுகள் உண்டாகலாம். பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். உற்றார் உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயரும், நிம்மதியும் அடைவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்திருந்தவர்களைச் சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். பணப்புழக்கம் சுமாராகக் காணப்படும். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் நிம்மதி குறையலாம். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எழுத்துத்துறையினர், அச்சுத்தொழில் செய்பவர்கள், வழக்குரைஞர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குழந்தைகளுக்காகத் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. கல்வித்துறையில் பணிபுரிவோர், மாணவர்கள் ஆகியோருக்குச் சில தடைகள் வந்து விலகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை கை வந்து சேரும். பூஜைப் பொருள் வியாபாரிகள், மனநலக் காப்பகம் நடத்துபவர்கள், தாய் – சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், திரவப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த மனக் கசப்பு தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். அண்டை அயலாரிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வரும் எண்ணம் நிறைவேறும் காலமாகும். மற்றவர்களின் காரியங்களில் வீணாகத் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள்! விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பயணங்களில் வீண் பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் சென்று வாருங்கள்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுதல் நல்லது! புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகலாம். தேவையற்ற மனசஞ்சலம் தவிர்த்தல் நல்லது. வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். புனிதப் பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். சுரம், உஷ்ண சம்பந்தமான பிணிகள் போன்றவை வந்து போகலாம். கண்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். வெகு காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கக்கூடிய காலமாகும். நெருப்பு, மின்சாரம் சார்ந்த தொழில் செய்பவர்கள், இராணுவம், காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள், பங்கு வர்த்தகம் போன்ற தொழில்களைச் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும். பழுதுபட்ட வீடு வாகனங்களைப் புதுப்பிப்பதன் மூலம் செலவுகள் வந்து சேரும். நரம்பு, எலும்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பிப் பணமோ, பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்! குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், ஆலயப் பணி புரிபவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், கழிவுப்பொருள் வியாபாரிகள், அசைவ உணவுப்பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், ஏஜன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வட்டித்தொழில், தரகு, ஏஜன்சி, கமிசன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள் – விற்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். நாட்பட்ட வாராக் கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் ஆகியவை திரும்பக் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் உண்டாகும். வெகு நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். கணவன் – மனைவி உறவில் சற்று எச்சரிக்கையுடன், முன் கோபத்தைத் தவிர்த்து இருப்பது நல்லது. சூதாட்டங்களை நம்பி ஏமாற வேண்டாம்! நண்பர்களின் சுப காரிய விஷயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வாயு, வாதம் சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம். பெண்களால் தென்கிழக்குத் திசையில் இருந்து எதிர்பாராத தனவரத்து உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது. தந்தை – மகன் உறவில் சுமுகமான சூழல் உருவாகும். வெகு காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் எதிர்பாராத செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். பங்கு வர்த்தகம் போன்ற தொழில்களைச் செய்பவர்கள் நல்ல பலன்கள் அடைவர். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய நிலையில் இல்லை. பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! மின்சாரம் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், இராணுவத்துறை சார்ந்தவர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், காவல்துறையில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். உணவகத் தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், மருந்து உற்பத்தி – விற்பனை ஆகியவற்றைச் செய்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் நிம்மதியையும் மக்களின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். புனிதப் பயணம், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்து வர முயற்சிப்பீர்கள். கணவன் – மனைவி உறவில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணக் காரியங்கள் நிறைவேறும். பழுதுபட்ட வீடு, வாகனம் போன்றவற்றைப் பழுது பார்ப்பதன் மூலமாகச் செலவுகள் உண்டாகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், திரைப்படம் – நாடகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், நவரத்தின வியாபாரிகள், திருமணத் தகவல் மையம், திருமணக்கூடம் ஆகியவற்றை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் வெகு காலமாக விட்டுப் போன குலதெய்வ வழிபாடு செய்வதற்கும், தாய்நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். நாட்பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவி நாடிச் செல்லுவீர்கள். வர வேண்டிய கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் – பொருட்கள் போன்றவை நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது! அரசு வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஏற்படலாம்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! புதிய நண்பர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சூதாட்டம் போன்ற விஷயங்களால் ஏமாற்றம் அடைய வேண்டாம்! கவனத்துடன் இருந்தால் வீட்டில் திருடு போவதைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவக்கூடிய நிலையில் இல்லை. இரும்பு, இயந்திரம், இரசாயனம் சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள், பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள், எண்ணெய், பலசரக்கு வியாபாரிகள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். தந்தைக்கு ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தடைப்பட்ட திருமணக் காரியங்கள் நண்பர்களின் உதவியால் நடைபெறலாம். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் கூடவும் நிம்மதி குறையவும் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! வெகு நாட்களாக வர வேண்டியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author