அக்ரூட் கோவா

தேவையான பொருட்கள்:

அக்ரூட் பருப்பு – 200 கிராம்
துருவிய தேங்காய் – ஒரு மூடி
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 600 கிராம்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 4
முந்திரி – 8

செய்முறை:

அக்ரூட் பருப்பை இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் மேல் தோலை நீக்கினால் வெள்ளை வெளேரெனப் பருப்பு கிடைக்கும். தேங்காயைத் துருவி, பருப்புடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, பாலூற்றி விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை அடி கனமான பாத்திரத்தில் போட்டு நெய், சர்க்கரை, பால் ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி அடுப்பிலேற்றங்கள். அடுப்பு அளவாக எரிய வேண்டும். கிளறிக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். அப்பொழுது தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, துருவிய முந்திரியையும் ஏலக்காயையும் கொண்டு அலங்கரியுங்கள். இதுவே அக்ரூட் கோவா எனப்படும் புதுமையான ஸ்வீட்.”

About The Author