அடிச்சுவடு அறியாமலே…

மனிதத்தை நுகர மறுக்கும் மனஊனம்
மலர்விழிகளின் வீழ்ச்சியாம் பார்வையின்மை
குரலோசை புக முடியாத கேளாமை
குறையுடைய உறுப்புகளால் குறையும் செயல்கள்
குன்றாமல் குதித்தெழும் தன்னம்பிக்கை இருப்பின்
கொழுந்தாய் வந்திறங்கி குறையுடனே இருந்து
மனதிலேயே மார்தட்டி மடிகின்ற அவர்கள்
தெய்வத்தின் திருவேட்டில் அச்சுப் பிழைகள்.

கற்பனையாம் நூலெடுத்து பாமாலை கட்டி
கவினுலகம் காண கவிக்கு சில நொடிகள்
கனவிலேயே காலம் கழித்து கரையேறுகையில்
மதிப்பறியாமல் மடிகின்ற மலர்கள் அவர்கள்.
அணைக்கின்ற அன்னையின் அரவணைப்பு அறியாமல்
தவிக்கின்ற தந்தையின் தளர்ச்சி தெரியாமல்
முளைக்காமல் மடிகின்ற அவர்களை புதைக்கின்றோம்
அவர்களின் மனச்சுவடாம் அடிச்சுவடு அறியாமலே………

About The Author