அதிகாலையில்

அதிகாலையில் யாரோ அழைத்தார் என்னை
யாருடைய அன்பான வருகை
புதியகாற்றுடன் நிறைந்தது என் முற்றத்தில்

பொன் இசைக்கருவியான என் இதயம்
அதிர்கிறது இனிய இசையால்
கடல் இருளில் கதறிக்கொண்டிருந்தது
நான் கரையின் எல்லையின்மையால் சூழப்பட்டிருந்தேன்
முழுவானும் அலையும் கருமேகங்களால் நிறைந்தது
மழை பொழிவேனென பயமுறுத்திக்கொண்டு

நான் இழுக்கப்படுகிறேன்
ரகசிய மாய சக்தியின்மையால் ஈர்க்கப்படுகிறேன்
வெறுமைப் படுக்கை நறுமணத்தால் நிறைய ஆரம்பிக்கிறது
யாரோ ஒருவரின் சுவாசத்தால் குரலால்

உனது விரல்கள் ஆயிரம் தாமரைகளின் இதழ்களாய்
எனது உடலின் அனைத்து அணுக்களிலும்
கரைந்து கலந்துவிட்டன.

(மூலம் : பிரதீபா சத்பதி)
தமிழில் – மதுமிதா

About The Author