அதிரூபவதிக்கு… (15)

கிளியோபாட்ராக்களுக்கும்
நடுக்கத்தையே தரும்
உன்
காலடித்தடத்தின்
அழகு!

…………………………………

எதைப்பற்றி
எழுதினாலும்
கோபித்துக் கொள்கிறாய்
உனைப்பற்றி
எழுதும்போது மட்டும்
சந்தோஷப்படும் நீ!

……………………………………

மரணத்தைத் தாண்டிக் கூட
வாழ்ந்துவிடுவேன்…
மறுபடியும்
என்னுடன்
நீ வருவதாய் இருந்தால்!

……………………………………

அதிசயப்பட்டே தீர வேண்டும்!
உலக அதிசயத்தைப் பார்த்து
எங்களூர் அதிசயம்
வாய் பிளந்து நிற்பது
அதிசயம்தானே…!

About The Author