அதிரூபவதிக்கு… (18)

நீ
தண்ணீர் குடிக்கும்போதெல்லாம்
உன்னைக் குடித்துக் கொண்டிருக்கும்
என்னைப் பார்த்தா…
தாகமா என்கிறாய்!

…………………………………………

என்
வீட்டுத் தோட்டத்திலிருந்து
பறந்து வந்த
வண்ணத்துப்பூச்சிகள்
உன் வீட்டுத்தோட்டத்தில்
தன் வண்ணச்சிறகுகளால்
காற்றில்
எழுதிவிட்டுப் போகின்றன…
உன்மீது
நான் கொண்ட
உண்மைக் காதலை!

………………………………………………

எனைப் பார்த்த கணத்தில்…
உன்
திருமுகத்தில்
ஆண்டவன் எழுதிய
அந்த ஒற்றைப் புன்னகை
நம்
காதலைப் பிரதிபலிக்கிறது!

…………………………………………………..

சதாசர்வ காலமும்
உன்னை
அலங்கரித்துக் கொண்டே
இருக்கிறாய்…
இயற்கையாகவே நீ
அழகின்
அமுதசுரபி என்ற
அரிய உண்மையை
அறியாதவளாய்!

About The Author