அதிரூபவதிக்கு… (21)

தேவையில்லாமல்
பொய் சொல்கிறேன்
நீ
தேவை என்பதற்காக!
…………………………………

நீ
என்னை விட்டு
பிரிந்து சென்றுவிட்டதாக
அனைவரும்
கூறுகின்றார்கள்.
ஆனால்
எனக்குத்தான் தெரியும்…

எனக்குள்ளேயே
நீ இருக்கின்றாய்,
ஓர் அதிசிறந்த
கவிதையைப் போல!
……………………………………………………………………….

அன்புகாட்ட வந்து
மரணத்தைக் காட்டிச் சென்ற
உன் பிரிவிலும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது…
என்னைப் போலவே
உன் காதலும்
……………………………………………………………………….

உன்னைப் போல
ஏமாற்றிவிட்டுச் செல்லாது
மரணமும்
என்ற
நம்பிக்கையில்தான்…
எனக்கான
சவப்பெட்டியை
நானே
ரசித்து ரசித்துச்
செய்துகொண்டிருக்கிறேன்!

About The Author

1 Comment

  1. சோமா

    இணையின் பிரிவும் அவளைத் தொடர யாசிக்கும் மரணமும் கொள்ளை அழகு. மரணத்துக்கப்பால் அவளை மீண்டும் அடைவது உறுதி என்றால் ஊர் கூடி எமனிடம் யாசிக்கிறோம், விரைவில் வந்து உன்னை அழைத்துச் செல்லட்டும்…

Comments are closed.