அதீதாவுக்கு

36.

எழுதி எழுதியும்
வரைந்து வரைந்தும்
பேசிப்பேசியும்
நினைத்து நினைத்தும்
பிடிபடாதொழிகிறாய்
ஏங்கவைத்து

மீண்டும் மீண்டும்
எழுதித் திரிகிறேன்,
வரைந்து திரிகிறேன்,
பேசித்திரிகிறேன்,
எண்ணித்திரிகிறேன்,
உன்னையே…

மீண்டும் மீண்டும்
என்னை ஈர்த்துன்
இருட்குகையுள்
புதைத்தழிக்கிறாய்
கணந்தோறும்…

நானும்
காற்று வெளியில்
கதறிப்புலம்பி
பேயாய் அலைகிறேன்
உன்
பாதாந்திரம் சேர.

37.

மன்னித்துக்கொள்:
என்னுள் உன் சூட்சுமம் புகுந்து
வெகுநாளாச்சு
திடீரென
இக்கவிதைக்காக
என்னுள் நுழைத்துப் புணர்ந்தேன்
என்னமாய் இன்பிக்குதுன்
அதீத பிம்பம்!

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author