அவல் பர்பி

தேவையான பொருட்கள்:

அவல் – 2 கப் (சற்று சூடாக்கி பொடித்தது)
சர்க்கரை – 1 1/4 கப்
தேங்காய்த்துருவல் – 4 மேசைக்கரண்டி
பால் பவுடர் – 100 gms
நெய் – 1 1/2 மேசைக்கரண்டி
பால் – 1 கப்
ஏலப்பொடி (அ) குங்குமப்பூ சிறிது.

செய்முறை:

மேற்கண்ட எல்லா பொருட்களையும் வாணலியை சூடாக்கி அதில் போட்டு பர்பி பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி தூண்டுகள் போடவும்.

About The Author