அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது!

தலைவர்: அடுத்தடுத்து ரெண்டு இடைத் தேர்தல்லயும் நாம தோல்வி அடைஞ்சதைப் பத்தி விளக்கம் குடுத்து ஒரு அறிக்கை தயார் பண்ணியிருந்தேனே, அதை எல்லாப் பத்திரிகைக்கும் அனுப்பிச்சியாய்யா?

தொண்டன்: அனுப்பிச்சேன் தலைவரே! ஆனா, ‘அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது’ன்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சுட்டாங்க.

*************


நண்பர்-1:
வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல ‘டு லெட்’னு எழுதி வாசல்ல தொங்க விட்டது தப்பாப் போச்சு!

நண்பர்-2:
ஏன், என்னாச்சு?

நண்பர்-1:
எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல ‘தேங்க்ஸ்’னு எழுதி மாட்டிட்டுப் போயிட்டான்.

***********


தொண்டன்-1:
ஒரு விளம்பரத்தப் புரிஞ்சுக்கற அளவுக்குக் கூட நம்ம தலைவருக்கு அறிவில்லன்னு எதை வெச்சு சொல்ற?

தொண்டன்-2: பின்ன? "சாப்பிட்டுக்கிட்டே குடி! குடிச்சுக்கிட்டே சாப்பிடு!"ங்கிற விளம்பரத்தத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, ஓட்டல்ல போய் சாப்பாடு கூட சரக்கும் வேணும்னு தகராறு பண்றாரே!

***********

About The Author