ஆணவம் வேண்டாம் !

வனத்தினிலே நெளிந்தே வளைந்திருந்த மரங்கண்டு
வானுயர்ந்த மரமொன்றதை
வக்கணையாய் முடமென்று கேலிபலபேசி
வாய்விட்டுச் சிரித்ததொரு நாள்

மனக்கணக்குப் போட்டிந்த மரம் நல்ல உத்தரமாய்
மாறுமென விறகுவெட்டி
மகிழ்ச்சியுடனே நெடியமரமதனை வெட்டியுடன்
மரக்கடைக் கனுப்பிவைத்தான்

கனத்த மரமொன்று வளை நாணல் நிலைகண்டு
கைகொட்டிச்சிரித்தாடிட
கடும்சூறைக் காற்றினில் மரம் வீழ நாணலது
கவலையுடன் தலை சாய்த்ததாம்

வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும்
வசைபாடி எள்ள வேண்டா
வடிவேலினொளியாகத் தடியோடு புகழ்மேவு
வடபழனி முருகேசனே!

About The Author

2 Comments

  1. ramagurunathan

    i appreciate the poem. the message given by you is apt for the persons concern.

  2. P.Balakrishnan

    இராம.குரு நாதன் அவர்களுக்கு நன்றி!-அரிமா இளங்கண்ணன்

Comments are closed.