ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்

அழகுபடுத்திக் கொள்வதும், அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமென்று எண்ணுவதும் ஆண், பெண் இருபாலருக்கும் உரியவை. ஆயினும், நம் நாட்டைப் பொறுத்தவரை, அழகுபடுத்திக்கொள்வது என்பது பொதுவாக பெண்கள் சமாசாரமாக உள்ளது. ‘இல்லை எங்களுக்கும் தேவை’ என்று கேட்கிற ஆணா நீங்கள்..? மேலும் படியுங்கள்!

சிகை அழகு

கருமையான தலைமுடியே முக அழகிற்குக் காரணமாகும். முடிந்தவரை நரை அதிகமாகும் முன்னரே கடைக்குச் சென்று ஆண்களுக்குரிய ‘டை’ வாங்கி நரையை மறைத்துக் கொள்ளுங்கள்!

உச்சந்தலையில் முடி குறைய ஆரம்பித்தால், நீங்கள் கூடிய விரைவில் வழுக்கையாவது உறுதி! மனம் தளராதீர்கள். இதோ சில குறிப்புகள்!

உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடுங்கள். மேலும், வழுக்கை ஏற்படும் போது மூக்கு, காது மற்றும் தலையின் பின்புறம் உள்ள முடிகளை சீராக வெட்டி அல்லது நீக்கி உங்கள் தோற்றத்தைச் ‘சிக்’கென்று வைத்துக் கொள்ளுங்கள்.

சரும பளபளப்பு

ஆண்கள் தங்களுடைய சருமத்தைப் பாதுகாப்பது மிக அவசியமாகும். அதுவும் தினந்தோறும் முறையாக செய்ய வேண்டும்.

முதலில் சருமத்தைக் குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் கடைகளில் கிடைக்கும் சரும வறட்சியைக் குறைக்கும் க்ரீம்களையும், சூரிய வெப்ப தாக்குதலில் இருந்து காக்கும் க்ரீம்களையும் தடவிக் கொள்ளுங்கள். சில நாட்களிலேயே உங்கள் சருமம் வழவழப்பாகவும் பளபளப்பாகவும் ஆவதை உணர்வீர்கள்.

சருமம் மென்மையாவதால் முகச்சவரம் செய்து கொள்வது எளிமையாகி விடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்த பளபளப்பு, வழவழப்பு என்பதெல்லாம் முகத்தோடு நின்று விடக்கூடாது. கைகள் கால்கள் என்று உடல் முழுவதுமான பராமரிப்பாக இருக்க வேண்டும்.

மேலும் பெண்கள் செய்வது போல வாரத்திற்கு ஒரு முறை, கடைகளில் கிடைக்கும் ப்யூமைஸ் (pumice stone) கல்லினைப் பயன்படுத்தி உடலின் சொரசொரப்பான பகுதிகளை வழவழப்பாக்கிக் கொள்ளலாம்.

ஆள் பாதி.. ஆடை பாதி

நீங்கள் உங்கள் உடைகளை அயர்ன் செய்ய சோம்பல் படுபவரா? கவலை வேண்டாம். எளிய வழி! துணிகளைத் துவைத்தவுடனேயே தாமதிக்காமல் அவற்றை நன்றாக உதறிக் காய வைத்தால் சுருக்கம் ஏற்படாது. அயர்னும் தேவையில்லை.

தட்பவெப்ப நிலைக்கேற்ப ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். வெயில் காலங்களில் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியுங்கள். இவ்வகை ஆடைகள் குறைவான வெப்பத்தையே உள்வாங்கும். எனவே வியர்வையினால் ஏற்படும் கறைகள் குறைந்து விடும். மேலும் முழுமையாக வியர்வைக் கறைகள் தொலைய, அக்குளில் இருக்கும் முடிகளை நீக்கி விடுங்கள். இதன் மூலம் துர்நாற்றம் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள்.

முகச்சவரத்திற்கு..

முகச்சவரம் செய்யும் உங்கள் ரேசர் நீண்ட நாட்கள் செயல்பட இதோ ஒரு எளிய வழி.

கடைகளில் கிடைக்கும் மினரல் ஆயிலையும், ரப்பிங் ஆல்கஹாலையும் (Rubbing alcohol) வாங்கிக் கொள்ளுங்கள். முகச்சவரம் முடித்த பின் ரேசரைக் காய வையுங்கள். பின் அதை மினரல் ஆயிலில் மூழ்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து ரேசரை வெளியே எடுத்து, ரப்பிங் ஆல்கஹாலால் எண்ணெயைத் துடைத்து எடுங்கள். மின்னும் உங்கள் ரேசர் நீண்டகாலம் உழைக்கும்!

(ஆதாரம் : வலையம்)

About The Author

42 Comments

 1. thanu

  எனது கலுட்து கருப்பாக கானப்படுகிரது காரனம் என்ன

 2. veera

  எனது முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளன. குறைக்க வழி என்ன?

 3. prabhakaran

  முன் தலையில் முடி அதிகம் உதிர்கிறது. நல்ல குறிப்பு கொடுக்கவும்.

 4. gunasilan

  நிலாசாரல் ஒரு அருமையான பக்கம். தங்கலின் அழகு குரீப்புகல் அர்ப்புதம்

 5. Raman PIllai

  தலையில் பொடுகு வராமல் இருக்க என்ன செய்ய வென்டும்

 6. Raman Pillai

  உதடுகல் கருப்பாக இருக்கிரது. அந்த உதடுகலை சிகப்பாக மார என்ன செய்ய வென்டும்

 7. Raman Pillai

  ஆன்கலுகு வரும் முகபருகலை தவிர்பது எப்படி. இந்த முகபர்வுகு ஒரு முடுவு சொல்லுங

 8. Rishi

  வாங்க ராமன் பிள்ளை,
  நீங்கதான் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிச்சவரா?!

  //ஆன்கலுகு வரும் முகபருகலை தவிர்பது எப்படி. இந்த முகபர்வுகு ஒரு முடுவு சொல்லுங//
  குளிக்கும்போது முகத்துல சந்தனத்தை தேய்ச்சு ஊறவச்சு அப்புறம் குளிச்சுப் பாருங்க.. ஆயில் உணவு ஐட்டங்களை ஒதுக்கி வையுங்க.

  //உதடுகல் கருப்பாக இருக்கிரது. அந்த உதடுகலை சிகப்பாக மார என்ன செய்ய வென்டும்//

  பெட்டர் லக்.. நெக்ஸ்ட் ஜென்மம்!!!

 9. Arun

  வழுக்கை விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 10. hameed

  முகத்தீல் உல்ல பருவை எப்படி எடுப்பது

 11. tharan

  முக தின்கருமை நிரம் மார என்ன செய் யலம்

 12. sundar

  எனது அக்குல் கருப்பாக இருக்கிரது.இதனை போக்க என்ன செய்ய வேன்டும்

 13. Mush

  இன்னும் எதவது டிப்ச் இருந்தல் கொடுஙல்

 14. bhath

  nalla azahu kurippu irukkum ninachu intha address open pannen but enna emathittanga.bye ine intha webku vara matten

 15. JEGATHESH

  என்னொட ச்கின்ன எப்படி cஒலொஉர் அக் மாதரதுனு சொல்லுங

 16. R.PRASHANTH

  yen mugathil mugaparu poga oru mudivu vendum and kannam erandum kuli neenga vendum oru theervu taruga

 17. adil

  யனது உதடு கருப்பக உல்லது நல்ல நிரமாக மாட்ர வேன்ட்ம் அதர்கு நான் யென்ன சேஇஅ வேன்டும்

 18. raj

  முகம் வெள்ளயாக மாற என்ன பன்ன வேண்டும்

 19. Mahalingam

  எனக்கு முகம் வெள்ளயாக மாற என்ன பன்ன வேண்டும்

 20. Maha

  முகம் வெள்ளயாக மாற என்ன பன்ன வேண்டும்

 21. Raja

  Comment…mugathula oil thugalgal iruku atha sari seiya enna pannanum plz sollunga moogu pakathula rendu pakamum oil and holes ah iruku

Comments are closed.