இஞ்சி புதினா தேனீர்

தேவையான பொருட்கள்:

ஒரு கைப்பிடியளவு – புதினா இலைகள்
இஞ்சி – ஓரங்குலத் துண்டு (நசுக்கிக் கொள்ளவும்)
தண்ணீர் – 2 முதல் 5 கப்
பால் – 1 1/2 கப்
பனங்கற்கண்டு (அ) வெல்லம் – சுவைக்கு

செய்முறை:

தண்ணீரை சுட வைத்து புதினாவையும், நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து மட்டான தழலில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டி பாலுடன் பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து பருகவும். சளிக்கும், இருமலுக்கும் நிவாணமளிக்கும் இதை தேவையான பொழுது செய்து பருகலாம். புதினா புதிதாக கிடைக்கா விட்டால் உலரவைத்தும் பயன் படுத்தலாம்.

About The Author