இட்லி ஸ்டார் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

வேகவைத்த இட்லி – 5
சீரகம் – சிறிதளவு
எண்ணெய் – அரைலிட்டர் (அவரவர் விருப்பத்திற்கேற்ப)
மசாலாபொரி, நெய்யில் வறுத்த வேர்க்கடலை, முந்திரி – தேவைக்கேற்ப
வட்டவடிவமாக நறுக்கிய தக்காளி, வெள்ளரி – அலங்கரிக்க
பிரியாணி மசாலா(கடையில் கிடைப்பதையும் பயன்படுத்தலாம்) – சிறிதளவு

செய்முறை :

இட்லியை கையினாலோ அல்லது மிக்ஸியிலோ அரைத்து பிரியாணி மசாலா பவுடர் மற்றும் சீரகம் கலக்கவும்.

முறுக்குப் பலகையில் ஸ்டார் அச்சினை வைத்து காய வைத்த எண்ணெயில் போட்டு எடுக்கவும். சிவக்க வந்தவுடன் வடிதட்டில் இட்டு ஆறவிடவும்.

மசாலாபொரி, நெய்யில் வறுத்த வேர்கடலை, முந்திரி – இவற்றைத் தட்டில் கொட்டி நடுவில் வறுத்த ஸ்டார் இட்லியை வைத்து அதன்மேல் தக்காளி,வெள்ளரி வைத்து பரிமாறவும். தேவைப்பட்டால் அவரவர் சுவைக்கு ஏற்ப சாஸும் தொட்டுக் கொள்ளலாம்.

About The Author