இது சொர்க்கத்தின் சிரிப்பு விழா (1)

அவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போனான். அங்கே கடவுளைப் பார்த்து ”நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?” என்றான். கடவுளும் ”சரி” என்று சொல்ல, அவன் கேட்டான்.

"நீங்கள் பெண்களை ஏன் கவர்ச்சியாகப் படைத்தீர்கள்?

”ஆண்களுக்குப் பிடிக்குமே என்றுதான்.”

”சரிதான், ஏன் அவர்களை இவ்வளவு அழகாகப் படைக்க வேண்டும்? ”

”அப்போதுதான் நீங்கள் அவர்களைக் காதலிப்பீர்கள்.”

”பின் ஏன் அவர்களை மூளையே இல்லாதவர்களாகப் படைத்தீர்கள்? ”

”அப்போதுதானே அவர்கள் உங்களைக் காதலிப்பார்கள்! ”

*****

அந்த வக்கீல் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போனார். கடவுள் அவரிடம் கேட்டார். ”நீ சொர்க்கத்தை அடைவதற்கு என்ன நல்ல காரியம் செய்திருக்கிறாய்”

வக்கீல் யோசித்து விட்டு "ஒரு வாரத்திற்கு முன்னால் ஒரு பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன்" என்றார்.

கடவுள், "அது சரி, ஆனால் சொர்க்கத்திற்குள் போவதற்கு இது மட்டும் போதாது" என்றார்.

வக்கீல் இன்னும் கொஞ்சம் யோசனை செய்த பிறகு, " மூன்று வருஷத்திற்கு முன்னால் ரொம்பக் கஷ்டத்தில் இருந்த ஒருவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன்" என்றார்.

கடவுள் தன் செக்ரட்ரியிடம் "என்ன செய்யலாம்?" என்று கேட்டார்.

செக்ரட்டரி உடனே , " பேசாமல் பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்" என்றார்.

*****

ஒரு ஆசிரியர், ஒரு குப்பை பொறுக்குபவன் மற்றும் ஒரு வக்கீல் ஆகிய மூவர் சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டினார்கள். சொர்க்கத்தின் காவலர் சொன்னார். "நீங்கள் உள்ளே வருவதென்றால் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்"

முதலில் ஆசிரியரிடம் கேட்டார். "பனிப்பாறைகளில் மோதி உடைந்த கப்பலின் பெயர் என்ன? "

ஆசிரியர் "டைட்டானிக்" என்று பதிலளித்தவுடன் சொர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்து குப்பை பொறுக்குபவர். அவரை உள்ளே விட காவலருக்கு மனசில்லை. அதனால் கொஞ்சம் கடினமான கேள்வியாக "எத்தனை பேர் கப்பலில் இருந்தார்கள்? " என்று கேட்டார்.

டைட்டானிக் படத்தைப் பார்த்திருந்த அவர் சொன்னார். “1228 பேர்” என்று.

வேறு வழியில்லாமல் அவரையும் சொர்க்கத்திற்குள் அனுப்பினார். அடுத்து வந்த வக்கீல், நிச்சயமாக சொர்க்கத்திற்குள் வரக்கூடாது என்று நினைத்த காவலர் கேட்டார்.

" அந்த 1228 பேரின் பெயர்களைச் சொல்லு"

"……….???"

*****

மூலம்: ஆஹாஜோக்ஸ்.காம்”

About The Author