இது (மாமூலில்லாத) போலிஸ் சிரிப்பு! (1)

வாடிகன் போப் ஒரு முறை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கார் ஓட்டும் ஆசை வர, டிரைவரை நகரச் சொல்லிவிட்டு அவர் கார் ஓட்டலானார். கார் 80 மைல் வேகத்தில் பறக்க, ஒரு போலிஸ்காரர் அந்தக் காரை மடக்கினார். அவருக்கு ஒரே திகைப்பு. அவர் உடனே தன் அதிகாரியிடம் ஒரு மிக முக்கியமான மனிதருடன் கார் வேகமாகப் பறந்ததைப் பற்றிச் சொன்னார்.

அந்த அதிகாரி "மிக முக்கியமான மனிதர் என்றால் அவர் யார், மேயரா?" என்று கேட்டார்.

"இல்லை அதைவிட முக்கியமானவர்" போலிஸ்காரர்.

"கவர்னரா?"

"இல்லை. அதைவிட முக்கியமானவர்"

"ஜனாதிபதியா?"

"அதைவிட முக்கியமானவர்"

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. "ஜனாதிபதியைவிட முக்கியமானவரா, என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார்.

போலிஸ்காரர், "அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா போப்பே அவருக்கு டிரைவரா இருக்கார்னா பாருங்களேன்!" என்று ஆச்சர்யித்தார்.

******

அவன் : "நான் இங்கே காரை நிறுத்தலாமா?"

போலிஸ் : "கூடாது"

அவன்: "மற்றவர்களெல்லாம் நிறுத்தியிருக்கிறார்களே!"

போலிஸ் : "அவர்கள் உன்னை மாதிரி என்னிடம் கேட்கவில்லையே!"

******

மூளை மாற்று சிகிச்சை செய்யுமிடத்தில் மூளைகள் விலை பேசப்பட்டன. விஞ்ஞானியின் மூளை ஒரு லட்சம் ரூபாயாகவும், பேராசிரியரின் மூளை இரண்டு லட்சமாகவும், போலிஸ்காரரின் மூளை பத்து லட்சமாகவும் இருந்தது.

"போலிஸ்காரரின் மூளைக்கு மட்டும் ஏன் அவ்வளவு விலை?" என்று ஒருவர் கேட்க, "ஏனென்றால்.. அது இன்னும் உபயோகப்படுத்தப்படவே இல்லை" என்று பதில் வந்தது.

******

லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறை, எப்ஃ.பி.ஐ மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூவருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் யார் மிகச் சிறந்தவர்கள் என்ற போட்டி. அமெரிக்க ஜனாதிபதி ஒரு சோதனை செய்ய முடிவு செய்தார். காணாமல் போன முயலை ஒரு காட்டில் கண்டுபிடிப்பதுதான் சோதனை

மத்திய புலனாய்வுத்துறையினர் காட்டிலுள்ள மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, "அப்படி ஒரு முயல் இல்லவே இல்லை" என்று அறிக்கை கொடுத்தார்கள்.

எப்ஃ.பி.ஐ.யினரால் இரண்டு வாரங்களுக்குப் பிறகும் முயலைக் கண்டுபிடிக்க முடியாமல் போக, காட்டை முழுதும் எரித்துவிட்டு, அங்குள்ள மிருகங்களையும், முயலையும் சேர்த்துக் கொன்றுவிட்டார்கள். அதற்காக வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.

லாஸ் ஏஞ்சலீஸ் போலிஸ் ஒரு பலமாக அடிபட்ட வெள்ளைக் கரடியைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஏற்கனவே அடிபட்டு நொந்து போன அந்த வெள்ளைக் கரடி, "ஆமாம், நான்தான் அந்த முயல்.. என்னை விட்டுவிடுங்கள்" என்று கதறியது.

ஆதாரம் : ஆஹாஜோக்ஸ்.காம்”

About The Author

1 Comment

Comments are closed.