இது (மாமூலில்லாத) போலிஸ் சிரிப்பு! (2)

காரை வேகமாக ஓட்டிச் செல்பவர்கள் போலிஸில் சிக்கினால் என்ன நடக்கும்?
கற்பனைதான் ஐயா! உண்மையில் நடந்திருந்தால் அது இதுவல்ல!!

அந்த ஆள் நேராகக் காரை ஓட்டாமல் அங்கும் இங்குமாக வளைத்து ஓட்டிக்கொண்டு சென்றான்.

போலிஸ்காரர் இடைமறித்து "எங்கே வாயை ஊதுங்கள்?" என்றார். அந்த ஆள், "எனக்கு ஆஸ்த்மா. என்னால் ஊத முடியாது" என்று கூற, உடனே போலிஸ் "அப்போ, காவல் நிலையத்திற்கு வந்து ரத்தம் சாம்பிளுக்குக் கொடு".

அவன் : "எனக்கு ரத்தசோகை இருப்பதால் முடியாது"

போலிஸ்: "அப்படின்னா, கீழே இறங்கி இந்த வெள்ளைக்கோட்டில் நேரா நடந்து காட்டு"

அவன்: "என்னால் அது முடியாது. நான் குடித்திருக்கிறேன்"

******

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.

போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"

அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."

மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."

போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."

மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"

போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."

மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"

அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."

போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"

மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."

******

காரைக் கண்டபடி ஓட்டி வந்தான் ஒருவன். வழியில் மடக்கிய போலிஸ்,

போலிஸ் : "நீ குடித்திருக்கிறாயா?"

அவன் : "ஆமாம்.. நேற்று இரவிலிருந்து குடிதான் – இரண்டு மூன்று பார்ட்டி – முதலில் பீர் குடித்தேன். அப்புறம் அடுத்த பார்ட்டியில் விஸ்கி.. அப்புறம் பிராந்தி.. என்று குடித்துக்கொண்டேதான் இருந்தேன்"

போலிஸ் : "காரை விட்டுக் கீழே இறங்கு. மூச்சுப் பரிசோதனை செய்ய வேண்டும்”

அவன் : "நான் சொல்வதை ஏன் நம்பமாட்டேன் என்கிறீர்கள்?

******

போலிஸ் (வேகமாகக் கார் ஓட்டி வந்தவனை மடக்கி) : நீ காரை ஓட்டி வரும்போதே ஐம்பத்தைந்து இருக்குமென்று தெரிந்தது.

அவன் : "தப்பு இன்ஸ்பெக்டர்.. தொப்பி போட்டிருப்பதால்தான் வயசான மாதிரி தெரிகிறது."

******

வேகமாக கார் ஓட்டி வந்த அவனைப் போலிஸ் பிடித்தது.

அவன்: "இன்ஸ்பெக்டர், நான் ஏன் வேகமாகப் போனேன் என்று சொல்ல விடுங்கள்."

போலிஸ் : "வாயை மூடு. இப்போ அதிகாரி வந்துவிடுவார். அது வரை இங்கேயே காவலில் இரு."

அவன் : "இன்ஸ்பெக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா……"

போலிஸ் : "வாயை மூடு, இல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்."

சில மணி நேரம் ஆயிற்று. மேலதிகாரி வரவில்லை. போலிஸ் பிடித்து வைத்திருந்த ஆளிடம், "உனக்கு இன்று அதிர்ஷ்டம். அதிகாரியுடைய பெண்ணுக்கு இன்று கல்யாணம் – அதனால வர்றப்போ சந்தோஷமா இருப்பார்’ என்றார்.

அவன் : "அப்படி நினைக்காதீர்கள். அந்தக் கல்யாணத்தில் மாப்பிள்ளையே நான்தான்."

******

ஆதாரம் : வொர்க்ஜோக்.காம்

About The Author