இயற்கை உலகம் (33)

தாவரங்களின் விதைகளை (seeds) :


தாவரத்தின் விதையில் முட்டைக் கருவுயிர் (embryo) அமைந்துள்ளது; இதிலிருந்துதான் புதிய தாவரம் உருவாகி வளர்கிறது. மேலும் அந்த முட்டைக் கருவுயிர், வேர்கள் மற்றும் இலைகளுடன் வளரும் வரை தேவைப்படும் உணவும் இந்த விதையில்தான் சேமித்து வைக்கப்படுகிறது. விதையைச் சுற்றித் தடிமானான பாதுகாப்புப் போர்வை அமைந்து அது உலர்ந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது,

பல விதைகள் காற்றினால் எடுத்துச் செல்லப்படுகின்றன. மஞ்சள் மலர்களைக் கொண்டுள்ள (dandelion) சில செடி வகைகள் இலேசான பஞ்சு போன்ற "குடைகளைக்" கொண்டிருப்பதால் விதைகள் நீண்ட தூரத்துக்குக் கொண்டு செல்லப்படுவதுண்டு. வேறு சில தாவரங்களில் விதைகள் நழுவி அல்லது சுழன்று செல்வதற்கேற்ப இறக்கை போன்ற அமைப்பு இருக்கும். தென்னை போன்ற மரங்களின் விதை நீர்நிலைகளின் வாயிலாக நீண்ட தூரம் சென்று கரையோரம் ஒதுங்கி மணற்பாங்கான பகுதிகளில் முளைத்து மரமாக வளரும்.

தாவரங்களின் இலைகள்


பசுமையான தாவரங்களும் மரங்களும் தமக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்ய இலைகள் இன்றியமையாதவை. எடுத்துக்காட்டாக, பழ மரங்களின் இலைகள் பழம் உருவாவதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்கிறது. பீச் (peach), மாப்லே (maple) போன்றவை இனிப்பானவை. எனவே இவற்றின் இலைகள் சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. இத்தாவரங்கள் சர்க்கரையை உற்பத்தி செய்ய, காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடையும், மண்ணிலிருந்து ஊட்டச் சத்துகள் மற்றும் நீரையும் பெறுகின்றன. இச்செயல் முறைக்கு ஒளிச்சேர்க்கை (photosynthesis) எனப் பெயர். சர்க்கரை உற்பத்தி செய்யும் எந்திரம் போல் செயல்படும் ‘க்ளோரோப்லாஸ்ட்கள் (chloroplasts)’ எனும் பசுமை வண்ணச் சின்னஞ்சிறு பொருட்களை இலைகள் கொண்டிருக்கும். இச்சிறு எந்திரங்கள் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை சூரிய ஒளி வழங்குகிறது.

இலையுதிர் காலங்களில் பல தாவரங்களின் இலைகள் வண்ணம் மாறி உதிர்ந்து விடும்; இதற்குக் காரணம் குளிர்காலத்தில் மரம் வளர வேண்டிய தேவை இல்லை என்பதுடன் தன் இலைகளை இழந்து ஆற்றலைச் சேமித்து வைத்துக்கொள்கிறது.”

About The Author