இராசிபலன்கள் (1-10-2012 முதல் 7-10-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, ராகு நன்மை தரும் கிரகமாகும். தொழிற்சாலை, வீடு ஆகியவற்றை மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். தரகு, கமிசன் போன்ற தொழில் செய்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதாகும். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவதோடு, புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகளும் ஏற்படும். பணியாட்களால் பிரச்சினைகளும் பொருள் இழப்பும் வர இருப்பதால் கவனம் தேவை! பழைய இரும்பு, இயந்திரம், இரசாயனம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அணுஆராய்ச்சித் துறையில் பணியாற்றுபவர்கள், அரசியல் அறிஞர்கள், அசைவ உணவுப் பொருட்களின் வியாபாரிகள், கணினித்துறை, நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பங்காளிகளுடன் சேர்ந்து, புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். விவசாயம் செய்பவர்கள் சுமாரான நற்பலனையே அடைவார்கள். மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருளையோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணிப் புதிய கடன்கள் வாங்குவீர்கள்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் காளி வழிபாடும் பிதுர் வழிபாடும் செய்து, அன்னதானமும் செய்ய வேண்டும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, புதன் நன்மை தரும் கிரகமாகும். மனைவிக்குத் திடீரென நோய் ஏற்பட்டு, மருத்துவச் செலவுகள் வந்து சேர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! காய்கறிகள், இலை, பூ, பழம் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர், சிறு தின்பண்ட வியாபாரிகள், மருந்துவத்துறையை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், அச்சுத் தொழில் செய்வோர், அஞ்சல்துறையினர், கவிஞர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் சற்றுக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. வீட்டையும் தொழிற்சாலையையும் இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுத் தொண்டுகள் செய்பவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துபவர்கள் போன்றோருக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். பிள்ளை இல்லாதவர்களுக்கு, இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் புதிய தொடர்புகளைத் தவிர்த்தல் நல்லது. காதல் சம்பந்தமான விஷயங்களில், உறவினர்களின் மூலமான நல்ல செய்திகள் வந்து சேரும். விட்டுப் போன பழைய உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து அன்னதானமும் செய்ய வேண்டும்.

மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில், வேற்று மதத்தினர்களிடமிருந்து எதிர்பார்த்த செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக முயற்சிப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். பொதுத் தொண்டுகள் செய்பவர்கள், திருமணத் தகவல் மையங்களை நடத்துபவர்கள், கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், கலைக் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், கட்டட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் நற்பலன் அடைவர். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது. காரணமற்ற மனச் சஞ்சலங்கள் வர இருப்பதால், புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட் செலவுகள் உண்டாகலாம். வாயு சம்பந்தமான, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். ஒரு சிலருக்கு, உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகிப் பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்ய வேண்டும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளின், தடைப்பட்டுப் போன சுப காரியங்கள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும். கண், காதுகளில் கவனம் தேவை! வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து வந்த பண உதவித் தொகைகள் கிடைக்கும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்றுத் தாமதமாகவே நடத்துவது சிறந்ததாகும். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியங்கள் நிறைவேறும். உற்றார் உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். மின்சாரம், இராணுவம், எரி பொருட்கள், காவல்துறை போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழில் செய்வோர், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள், தரகு, கமிசன் போன்ற தொழில் செய்வோர், நில புலன்கள் விற்பனை செய்வோர் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். மாணவர்களுக்குப் புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.
  
சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மனத் திருப்தி அடைவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான பலன்கள் கிடைக்கும் காலமாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு, வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! குடும்பச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்து கடன் உதவித் தொகைகள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் உண்டாகும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலமாகவோ செய்யும் தொழிலிலோ திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பெண்களால், தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். முதியோர் இல்லம் நடத்துபவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு வியாபாரிகள், கடல்துறை சார்ந்த அறிஞர்கள், தண்ணீர் மற்றும் குளிர்பான வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேலையாட்களால், எதிர்பார்த்த ஆதாயம் இல்லை. பயணங்களின்போது, சம்பந்தம் இல்லாத நபர்களின் தொடர்புகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில், சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற மனச் சஞ்சலங்களைத் தவிருங்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவனத்துடன் இருக்க வேண்டும். வராத பணம், திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருவது நல்லது. காய்ச்சல், உடல் சூடு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. கட்டட சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்வோர், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், அழகுக் கலைக்கூடங்களை நடத்துபவர்கள், நடிப்புத்துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், விபூதி குங்குமம் போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சனி நன்மை தரும் கிரகமாகும். ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்டங்களில் பணத்தையும் பொருட்களையும் ஏமாறாமல் இருங்கள்! வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தாய்நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனத்துடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் கடன் வாங்குவதைத் தவிருங்கள்! காதல் விஷயங்களில், எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இரும்பு, இயந்திரம், எண்ணெய், பலசரக்கு, மாமிசப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர், ஆலை அதிபர்கள், பொறியியல்துறையைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொதுநலச் சேவைகளைச் செய்வோர் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். காணாமல் போன பொருட்கள் காவல் துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். பிரிந்துபோன உறவுகளுடன் திரும்பவும் தொடர்புகள் ஏற்படக் கூடிய காலமாகும். சகோதர சகோதரிகளின் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகத்துறையினருக்கு மேலதிகாரிகளிடம் மனக் கசப்புகள் ஏற்பட்டுப் பணி இடமாற்றம் ஏற்பட இருப்தால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும். ஒரு சிலருக்கு, வீடு மற்றும் பணி இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில், திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுங்கள்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், பரிசு மற்றும் பாராட்டுதல்களோடு அரசு ஆதரவுகளையும் பெறுவார்கள். வராத கடன், கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வீடு, நிலம் மற்றும் வாகனங்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுப காரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது! வெளிநாட்டில் வசிப்பவர்கள், தாய்நாடு சென்று திரும்பி வரக் கூடிய காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவதால், வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகம் இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்கார வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். எடுத்த காரியத்தைத் தைரியத்துடன், வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும். ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்ட விஷயங்களில் ஏமாற்றம் அடைய வேண்டாம்! படித்த, வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். தாயின் உடல் நிலையில் வெகு நாட்களாக இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து காணப்படும். விவசாயம் செய்பவர்கள், புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல லாபம் பெறுவார்கள். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். பொதுத் தொண்டு நிறுவனத்தவர்கள், திருமணத் தகவல் மையங்கள் நடத்துபவர்கள், ஆலயப் பணி செய்வோர், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துபவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், இனிப்புப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்வோர், பூ, பழம் மற்றும் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்வோர் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி இருவரும் ஒன்று சேருவர். நீண்ட நாட்களாக வராத கடன், கொடுத்து இருந்த பணம், பொருட்கள் ஆகியவை திரும்பக் கை வந்து சேரும். மாணவர்கள், கல்வியில் பரிசும் பாராட்டுகளும் பெறுவதோடு அரசு உதவித்தொகைகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். காதல் சம்பந்தமான விஷயங்களில், எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். வாயு, வாதம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது. பழுதுபட்ட வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்கான பொருட் செலவுகள் வந்து சேரும். அரசுத்துறை சார்ந்த உயர் பதவிகள் வகிப்பவர்கள், ஜவுளி, நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், மருந்துப்பொருள் வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும் காலமாகும். பொது நலத் தொண்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயரும் புகழும் அடைய வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட திருமணக் காரியங்கள், மற்றவர்களின் உதவியால் நிறைவேறும் காலமாகும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். இரும்பு, இயந்திரம், இரசாயனம் சம்பந்தமான தொழில்கள் செய்வோர், எரி பொருள் வியாபாரிகள் ஆகியோர் லாபம் அடைவர். நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ஒரு சிலர், வீடு மற்றும் பணியிட மாற்றம் செய்வீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில், வெகு காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு, கேது நன்மை தரும் கிரகமாகும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகும். மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முன் கோபம் தவிர்த்தல் நல்லது! வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில், வேற்று மதத்தவரால் ஆதாயமும் நற்செய்திகளும் வந்து சேரும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். கண், காது, தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதைகள் வருவதன் மூலம் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். விபரீதமான எண்ணங்களைக் கை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட் செலவுகள் ஏற்படலாம். வட திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். அசைவப் பொருட்கள் சம்பந்தமான தொழில்கள் செய்வோர், பொறியியல் கல்லூரி சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எண்ணெய்களை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர், பழைய இரும்பு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடும் அன்னதானமும் செய்து வர வேண்டும்.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author