இராசிபலன்கள் (10-02-2014 முதல் 16-022-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட நோய்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். நண்பர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணக் காரியங்களில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவு போன்றவை நிரம்ப உண்டாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். எழுதுபொருள் வியாபாரிகள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பவர்கள், எழுத்தாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், காய்கறி, இலை, சிற்றுண்டி விற்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய வீடு வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளுக்காக எதிர்பார்த்து வந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். ஆதரவற்றோர்க்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வெகு காலமாக நினைத்துக்கொண்டு இருந்த கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம், நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ள காலமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். உறவினர்களால் வீண் பொருட்செலவுகள் உண்டாகும். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! நீண்ட நாட்களாக வராத பணம் திரும்பக் கை வந்து சேரக் கூடிய காலமாகும். வாயு, வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லதாகும். திருமண விஷயங்களுக்காக முயற்சி செய்யலாம். கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், நாடகத்துறை சார்ந்தவர்கள், வாகனத் தொழில் செய்பவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆபரணங்கள் நவரத்தினங்கள் ஆகியவற்றை விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலயத்தைத் திருத்தி கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகள் வந்து வெற்றி அடைவீர்கள். முன் கோபத்தைத் தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது. குலதெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோஷங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களினால் பணம் கை விட்டுப்போக இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது! பங்குச்சந்தை, கணிதம், எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் பதவி வகிப்பவர்கள், நெருப்பு சம்பந்தமான, உணவு சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் மிகவும் ஆதாயம் அடைவர். சம்பந்தம் இல்லாமல் அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள்! உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! காதல் சம்பந்தமான விஷயங்களில் நற்செய்திகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள், வாகனங்களில் பணியாற்றுபவர்கள், அரசுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் நற்பலன் அடைவர். விவசாயம் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர். வீடு, நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர்பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லதாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட்செலவுகள் உண்டாகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால், செய்யாத குற்றங்களுக்காகக் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், நகை வியாபாரிகள் ஆகியோர் வர்த்தகத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது! சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்ட மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலயத்தைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் நற்பெயர் பெறுவீர்கள். நாட்பட்ட பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகப் புதிய கட்டடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவுகள் உண்டாகும். பெண்கள் சம்பந்தமான, காதல் சம்பந்தமான விஷயத்தில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். அலுவலகத்துறையினருக்குப் பணி இட மாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், இரும்பு, இயந்திரம், எண்ணெய் சம்பந்தமான வியாபாரிகள், பலசரக்குத் தொழில் செய்பவர்கள், பழைய இரும்புப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் விற்பவர்கள், அலுவலகப் பணி உதவியாளர்கள், மிசினரி சம்பந்தமான உதிரிப் பாகங்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், எரிபொருள் வியாபாரிகள் ஆகியோர் மிகவும் ஆதாயம் அடைவர். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்காகத் தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். மூத்த சகோதரர்களால் பொருட்செலவு, நிம்மதிக் குறைவு ஏற்படலாம்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- ஐயப்பன் மற்றும் அம்மன் வழிபாடு செய்து அன்னதானமும் செய்து வருக!

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணினி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், பழ வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், தானிய வியாபாரிகள், பூ போன்ற நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெகு காலமாக எதிர்பார்த்து வந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். தந்தை – மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாயுத் தொல்லை, வயிற்றுத் தொல்லை ஆகியவை வந்து போகும். பொதுநலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நற்பெயர், புகழ் எடுப்பீர்கள். கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் புதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள். குடும்பச் சொத்துக்கள் போன்ற விஷயங்களில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. உடற்சூடு, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும். வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நெடு நாட்களாகப் பிரச்சினையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும். தோல், ரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து போகும். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், பழைய இரும்பு வியாபாரிகள், சாயப் பொடித் தொழிற்சாலைகளை நடத்துபவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், ஆசிரமவாசிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள், நீதிமன்றங்களில் பணி செய்பவர்கள், தரகு, வட்டித் தொழில் செய்பவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சி செய்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவர். அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தை கவனியுங்கள்! விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! கண்களில் கவனத்துடன் இருப்பது நல்லது! பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த முயற்சியின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். நெருப்புத் தொழில் செய்பவர்கள், காவல்துறையினர், இராணுவம் சார்ந்தவர்கள், இணையத்தளங்களை நடத்துபவர்கள், மின்சாரத்துறை சார்ந்தவர்கள், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். கண், காது ஆகியவற்றில் மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லது! விட்டுப் போன கணவன் – மனைவி உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. காதல் சம்பந்தமான விஷயங்களில் பெண்களால் அவப் பெயர் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது! மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். புதிய தொழில் தொடங்குவதற்காக வங்கிகள் மூலம் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில், தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகள் நீங்க மருத்துவத்திற்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வருக!

தனுசு:-

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சூதாட்டம் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவற்றைத் தவிர்த்தல் நல்லதாகும்! வீடுகளைப் புதுப்பித்துக் கட்டும் செலவு வந்து சேரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளைச் சற்றுத் தாமதமாகத் தொடங்குவது நல்லது. ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி செய்து அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுகமான உறவு ஏற்படும். மூளை, நரம்பு, எலும்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகலாம். எதிர்பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். கேஸ், வெல்டிங் துறையினர், காவல்துறையினர், ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர், கார உணவுப்பொருள் வியாபாரிகள், நிலக்கரி, விறகு வியாபாரிகள், மசால் பொடிகளை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். பூர்விக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் முன்கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது! நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- முருகன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டுகளும் கிடைக்கும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். திரவப் பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், மருந்து நிறுவனம் நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள், கப்பல் பணி செய்பவர்கள், உப்பு, உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வராத கடன், கொடுத்து வைத்த பணம் எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். பல காலமாகத் தீராத நோய்கள் புதிய மருத்துவர்களின் உதவியால் நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவு உண்டாகும். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல சூழ்நிலைகள் காணப்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்! எதிர்பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது!

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். எதிர்பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். நீண்ட காலமாகக் காணாமல் போன பொருட்கள், நபர்கள் திரும்ப வீடு வந்து சேரும் காலமாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பண விஷயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாயின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். பூ பழம், பூஜைப் பொருள் விற்பவர்கள், இனிப்பு வியாபாரிகள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், மடாதிபதிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற்பலன் அடைய வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகும். பிள்ளைகளால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். கவனத்துடன் பயணம் செய்வது நல்லது! நீண்ட தூரப் புனிதப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு செல்லுதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்துக் காரியத்தில் கவனமாய் இருங்கள்! சொத்து சம்பந்தமான வழக்கு விஷயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகள், கலைத்துறையினர், அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருள் வியாபாரிகள், அடிமைத் தொழில் செய்பவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், துப்புரவுப் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல ஆதாயங்களை அடைவர். தேவையற்ற நண்பர்களின் தொடர்புகளால் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனத்துடன் பழகுதல் நல்லதாகும்! கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பணம் வந்து சேரும். முதுகு, வயிறு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் மற்றும் அம்மன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author