இராசிபலன்கள் : 12.11.2007 முதல் 18.11.2007 வரை

1. மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். செய்தொழிலில் பொருள் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் பொருட் செலவு உண்டு. அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. சமுதாயப் பொருப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவு உண்டாகும். அந்நிய நாட்டுப் பயணங்களைத் தள்ளிப் போடவும். தீர்த்த யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

2. ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, .புதன் நன்மை தரும் கிரஹமாகும். காண்டிராக்ட் தொழில், மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர்கள், அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். பொருளாதாரம் சுமாராக இருக்கும். புதிய வாகன மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் பெயர், புகழ் ஏற்படும். காதல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். வாகனங்களில் கவனமாகச் சென்று வருதல் நல்லது. வுpச சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். பெரிய மனிதர்கள் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

3. மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். கடன்கள் தொல்லை தரும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனை அடைப்பீர்கள். நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். கார், லாரி, மற்றும் வாகனத் தொழிற்சாலைகள் நடத்துவோர்களும் இவற்றில் பணிபுரிவோர்களும் நற்பலன் அடைவார்கள். உடம்பில் எலும்பு, மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். இழந்த பொருள்கள் திரும்பக் கிடைக்கும். நல்ல நண்பர்களால் சில ஆதாயங்கள் உண்டாகும். குலதெய்வ வழிபாடு செய்து வரவும். வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

4. கடகம்:-

கடக ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணுவீர்கள். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். மனைவி வழிச் சொந்தபந்தங்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். பேராசையை விலக்குதல் நல்லது. யாத்திரையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். பங்காளிகளுடன் புதிய பிரச்சனைகள் உருவாகலாம். கமிஷன், தரகு தொழில் செய்வோர்கள், மற்றும் வக்கீல்கள், எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு விஷயங்களில் வெற்றி கிடைக்கும. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

5. சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வடதிசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள். பழைய கடன்கள் அடைபடும். புதிய கடன் வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் தீரும புதிய செல்வந்தர்கள் தொடர்பால் தொழில் தொடங்க எண்ணுவீர்கள். கலைத்துறையினர் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. கம்ப்யூட்டர், மற்றும் மின்சாரத் துறை சார்ந்தவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வீடு, மற்றும் வாகன மாற்றங்கள் உண்டாகும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

6. கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, செவ்வாய், சந்திரன் நன்மை தரும் கிரங்களாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். செய் தொழிலை மாற்றி அமைக்கத் திட்டம் போடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். எதிர்பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். யாத்திரை வெற்றியளிக்கும். வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 9, 2
இராசியான நிறம்:- சிகப்பு, வெள்ளை
இராசியான திசை:- தெற்கு, மேற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

7. துலாம்:-

துலா ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் கைவந்து சேரும். விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் இல்லை. கலைத்துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் கிடைக்கும். உறவினர்களால் பொருட் செலவு உண்டாகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், மற்றும் சினிமா, நாடகத்துறை சார்ந்தவர்கள், கலைஞர்கள் நற்பலன் அடைவார்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

8. விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகப் பொருட் செலவு உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூமி, நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். எழுது பொருள், நோட்டு, புத்தகம், பிரிண்டிங் சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். பெண்களால் ஆதாயம் இல்லை. அடுத்தவர்களுக்காக உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு. இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

9. தநுசு:-

தநுசு ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. வங்கிகள் மூலம் எதிர்பார்த்த பணம் கிடைக்கக் காலதாமதமாகும். குடும்பச் சொத்துகள் சம்பந்தமாகப் புதிய பிரச்சனைகள் ஏற்படும். யாத்திரை வெற்றி தராது. செய்தொழிலில் இடமாற்றம் ஏற்படலாம். பழைய தொழிலை மாற்றியமைக்கத் திட்டம் போடுவீர்கள். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும. பிறருக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். கண், பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சனைகள், மற்றும் பொருள் இழப்பு உண்டாகும். வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
.
இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

10. மகரம்:-

மகர ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். வங்கிகளால் ஆதாயம் உண்டாகும். செல்வாக்கு, புகழ் கூடும். பெரிய மனிதர்கள் சந்திப்பில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத் துறையினருக்குப் பதவி உயர்வு ஏற்படும். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தேவையற்ற காரியங்களில் தலையிட வேண்டாம். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். உடம்பில் நரம்பு, மற்றும். இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள், மற்றும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

11. கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். பிள்ளைகளால் மன நிம்மதி இல்லை. உடம்பில் தோல், மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். வீடுகளைத் திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.. வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நீர்வளம், நிலவளத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப்போடவும். எதிர்பார்த்த பணம் கிடைககச் சற்றுக் கால தாமதம் ஆகும். தாயின் உடல் நிலை பாதிப்படையும். புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

12. மீனம்:-

மீனம் ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் லாபம் உண்டு. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவரவு உண்டாகும். தந்தைக்கு சில கண்டங்கள் வந்து நீங்கும். செய்தொழிலில் கவனம் தேவை. சகோதிரிகளால் ஆதாயம் இல்லை. ஆலயப்பணி செய்வோர்கள், மற்றும் அறநிலைத்துறை சார்ந்தவர்கள் நன்மை அடைவார்கள். கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.. பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும். .

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.”

About The Author