இராசிபலன்கள் (15-6-2009 முதல் 21-6-2009 வரை)

1.மேசம்:- மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும்.பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற் பெயரும், மன நிம்மதியும் அடைவீர்கள், நாட்பட்ட தீராத வியாதிகள் தீர வேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம். பூர்வீகச் சொத்து விசயமான பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். நெருப்பு,ஹோட்டல்,சிற்றுண்டிச் சாலைகள் ஆகிய இவற்றில் பணி புரிவோர்கள், சினிமா,நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இவற்றில் பணி புரியும் பேராசிரியர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். அநாதைச் சிறுவர்கள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டு நற் பெயர் எடுப்பீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

2.ரிசபம்:- ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். தீர்த்த யாத்திரை மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். கட்டிட சம்பந்தமான இரும்பு,மணல்,செங்கல்,சிமிண்ட் போன்ற வியாபாரிகள்,கலைத்துறை சார்ந்த பேராசியர்கள் மற்றும் இவற்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.கணவன் மனைவி உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்த விலகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்கள் நிறைவேறும்.ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதின் மூலம் மன நிம்மதியும் பொது மக்களின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

3.மிதுனம்:- மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். காய்கறிகள்,இலை,பூ,கீரை போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள்,மற்றும் தண்ணீர்,கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றம் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும்.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களை புதுப்பிப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரும்.உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகும்.மற்றவர்களை நம்பிப் பணம்,பொருட்கள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். ஆலயப்பணி செய்வோர்கள்,அறநிலையத்துறை சார்ந்தவர்கள்,பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,வட்டித் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வரவும்.

4.கடகம்:- கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பெட்ரோல், டீசல், எண்ணை போன்ற வியாபாரிகள்,மருத்துவத் துறை சாரந்த பணியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். கண்களில் கவனமுடன் இருக்கவும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற மனசஞ்சலம் தவிர்த்தல் நல்லதாகும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.தீர்த்த யாத்திரைகள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது.புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.உத்தியோகத்தில் வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.உடல் நிலையில் சுரம் மற்றும் ஊண்ண சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

5.சிம்மம்:- சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் கை வந்து சேரும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வரப் போட்ட எண்ணங்கள் நிறைவேறும் காலமாகும்.மற்றவர்களின் காரியங்களில அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும். இரும்பு, இயந்திரம், கம்யுட்டர் போன்ற வியாபாரிகள், அரசுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், ஆலயப் பணி செய்வோர்கள்,பழமையான பொருட்கள் விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். யாத்திரைகளில் வண்டி வாகனங்களில் தேவை இல்லாத வீண் பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் சென்று வரவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

6.கன்னி:- கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் வாயு வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வீடுகளைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பயணங்களின் போது வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் உகந்ததாகும்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். காய்கறி,இலை,பூ,பழம் போன்ற வியாபாரிகள்,மர வியாபாரம் செய்பவர்கள்,வங்கித் தொழில் புரிவோர்கள்,அரசு நீர்வளம் மற்றும் நில வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவீர்கள்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

7.துலாம்:- துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும்.உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லதாகும்.வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழிற் செய்வோர்கள்,நறுமண சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,எழுத்துப் பணி புரிபவர்கள்,வக்கீல்கள் ஆகியோர்கள் நல்ல பலன்கள் அடைவார்கள்.நண்பர்களால் எதிர்பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம். பெண்களால் தென் கிழக்குத் திசையில் இருந்து எதிர்பாராத தன வரத்து உண்டாகும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உருவாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:தெற்கு
புரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

8.விருச்சிகம்:- விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்..குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் மற்றும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். குடும்பத்தில் தடைபட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலமாகும்.வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்கள் அடைவீர்கள். தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், விவசாயம் செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். தீர்த்த யாத்திரைகள் சென்று வர முயற்சிப்பீர்கள்.பழைய கடன்கள் அடைத்து புதிய கடன் வாங்குவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென் மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

9.தனுசு:- தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை.காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.புதிய நண்பர்களின் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம்.சூதாட்டம் போன்ற விசயங்களில் பணம் பொருள் கிடைக்கும் என்று எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். தந்தைக்கு ஏற்பட்டுவந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் தடைபட்ட திருமண காரியங்களில் நண்பர்களின் உதவியால் நடைபெறலாம்.தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது.பிள்ளைகளால் பொருட் செலவுகளும் மன நிம்மதியும் குறைய இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.தண்ணீர்,கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமாகிய பொருட்கள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,ஆலயப் பணி செய்பவர்கள்,அறநிலையத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்..நாட் பட்ட வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.வீட்டில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம்.உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு வெய்து வரவும்.

10.மகரம்:- மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு.குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் முன் கோபத்தை தவிர்த்து இருப்பது நல்லதாகும்.சூதாட்டங்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.நண்பர்களின் சுப காரிய விசயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள்.காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.வெகு நாட்களாகத் தடைபட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும். நாட்பட்ட வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்.அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் உண்டாகும். நாட்பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடிச் செல்லுவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியதன திசை:தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

11.கும்பம்:- கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளுக்காகத் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். தொலை தூரப் பயணங்கள் மூலம் எதிர்பார்த்து இருந்தவர்களை சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நெருப்பு,இராணுவம்,போலீஸ் போன்ற துறை சார்ந்தவர்கள்,பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எண்ணைகள் போன்ற வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனநிம்மதி குறையலாம்.பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை..கல்வித்துறை ஆசிரியர்கள் இவற்றில் பணி புரிவோர்கள், மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வந்து விலகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

12.மீனம்:- மீன ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.கணவன் மனைவியின் உறவுகள் சமாராகக் காணப்படும்.செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்பட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறையும்.தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது நல்லது.அரசு வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதங்கள் ஏற்படலாம்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் வெகு காலமாக விட்டுப் போன குல தெய்வ வழிபாடு செய்வதற்கும்,தாய் நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது. வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.விட்டு போன கணவன் மனைவி உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

(தொடரும்)

About The Author