இராசிபலன்கள் (28-4-2008 முதல் 4-5-2008 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். இனிப்புப் பொருட்கள் வியாபாரம் நடத்துவோர்கள், கோயிலில் பணிபுரிவோர்கள், பேராசிரியர்களுக்கு நற்பலன் தரும் காலமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். உடம்பில் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் எதிர் பார்த்த அளவு லாபம் பெற இயலாது. அரசியல்வாதிகள், கலைத்துறையினர்களுக்குப் பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு சம்பந்தபட்ட தொழில்கள், இராணுவத்தொழில், காவல்துறையைச் சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். கலைத்துறையினர்களும், அரசியல்வாதிகளும் லாபம் அடைவர். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். காதல் விசயங்களில் எதிர் பார்த்ததை விட நல்ல அநுகூலம் உண்டாகும். தூரத்து யாத்திரை மேற்கொள்வீர்கள். உடம்பில் மேகம் சம்பந்தமான பிணிகள், உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கமேற்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். பூ, பழம் போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் பேராசிரியர்களுக்கு மற்றும் சேர் மார்க்கெட், பைனான்ஸ் தொழில் நடத்துவோர்களுக்கு நற்பலன் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செய் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்குவதைத் தள்ளிப் போடவும். இரும்பு இயந்திர சம்பந்தமான தொழில்கள், எண்ணை வியாபாரம் செய்வோர், பலசரக்குத் தொழில் வியாபாரம் செய்வோர் லாபம் அடைவர். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பொருளாதாரம் சீராக இருக்கும். புதிய வீடு, நிலம், கார் போன்றவை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாகின்ற காலமாகும். கண்களில் கவனம் தேவை. நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டு. புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு கட்டக் கூடிய காலமாகும். குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் பரிசுகள் கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு மாற்றம் ஏற்படும். செய்தொழில் கவனம் தேவை. யாத்திரை விலக்கவும். குல தெய்வ வழிபாடு செய்து வரவும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென் மேற்கு
பரிகாரம் :- அம்மன்,சாஸ்த்தா,ஆஞ்சனேயர் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் கண், பல் சம்பந்த வியாதிகள் நரம்புத் தளர்ச்சி, மன உளைச்சல் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட தூரப் பயணங்கள் வெற்றியளிக்காது. காதல் வியங்களில் கவனம் தேவை. மனைவிக்கு நோய் வாய்ப்படும். மாணவர்கள், கலைத்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணப்புழக்கம் சிறிது நெருக்கடி வந்து விலகும். வீடு, நிலம் போன்றவைகளில் மாற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கோர்ட் வழக்கு விபகாரங்களில் வெற்றியடைவீர்கள். உடம்பில் சுவாச சம்பந்தமான கோளாறுகள், அலர்ஜி போன்ற நோய்கள், சளித் தொல்லைகள் ஏற்படும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென் மேற்கு
பரிகாரம் :- ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.

துலாம் :-

துலாராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் வீண் சலசலப்புகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். அரசுத்துறையின் மூலம் உதவிகள் கிடைக்கும். நீண்டதூர யாத்திரைகள் மூலம் நற்பலன் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்படும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சகோதர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டலும் அவர்களால் ஆதாயம் உண்டாகும். கண்டங்கள் வந்து நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண காரியம் நிறை வேறும். காலமாகும்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்க
பரிகாரம :- சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.

விருச்சிகம் :-

விருச்சகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். இரசாயனத் தொழில், வட்டித் தொழில், கன்ஸ்டிரக்ஸன்ஸ், காண்டிராக்ட், கமிசன் தொழில் செய்வோர்கள், மீன்,முட்டை,மாமிச உணவு வியாபாரிகள் லாபமடைவர். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து நீங்கும். உடம்பில் முதுகு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்த போகும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. ஆலயப் பணிகளில் தன்னை ஈடு படுத்துவதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மதிப்பெண்களும், பரிசும் கிடைக்கும். யாத்திரை விலக்கவும். வெளி நாட்டு முயற்சிகளில் கவனம் தேவை.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கட்டிட சம்பந்தமான கல், மணல், சிமிண்ட், செங்கல் வியாபாரிகள் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள், கார் போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கட்டிட சம்பந்தமான பொருட்கள், காண்டிராக்ட் தொழில் செய்வோர்கள், அரசு ஊழியர்கள் லாபம் அடைவர். தெற்கு திசையிலிருந்து பெண்களால் நன்மை அடைவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். ரேஸ்,லாட்டரி போன்றவைகளால் அதாயம் உண்டாகம்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் சிற்சில பொருட் செலவுகள் உண்டாகும். உடம்பில் உஷ்ணம் மற்றும் வாயு சம்பந்தமான நோய் கள் வந்து விலகும். நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், ஹோட்டல் தொழில்கள், மின்சாரப் பணி செய்பவர்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோர்கள் லாபம் அடைவர். செய்தொழிலில் நல்ல லாபம் தரும் காலமாகும். காதல் வெற்றியளிக்கும். நித்திரை பங்கம் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். தீராத அரசு வழக்குகள் தீரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுதல் நல்லது. உடம்பில் வாயு மற்றும் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். எழுத்துப் பணி செய்வோர்கள், வங்கிப் பணியாளார்கள், காய்கறி வியாபாரிகள் லாபமடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். பொது நலத் தொண்டுகளில் தன்னை ஈடு படுத்திக் கொண்டு மன நிம்மத் அடைவீர்கள். பிள்ளைகளால் பொருட் செலவுகள் உண்டு. பெண்கள் விசயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்குத் தொழிலில் நஷ்டத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாது.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்யவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். தன புழக்கம் நன்றாக இருக்கும். வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் புகழ் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும். தாய் தந்தைகளுக்கு சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். உடம்பில் நரம்பு, மற்றும் உணவுக்குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும். வாகனத் தொழில்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், இனிப்புப் பொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் இவர்களுக்கு நற்பலன் உண்டாகும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம :- சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.”

About The Author