இராசிபலன்கள் (30-6-2008 முதல் 6-7-2008 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் கவனமுடன் செயல்படவும். தங்கம், வெள்ளி வியாபாரிகள் லாபம் அடைவர். புதிய அணிகலன்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. பிரயாசையுடன் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள். தேவைற்ற மன சஞ்சலம் தவிர்க்கவும். கண்களில் கவனம் தேவை. ரேஸ், போட்டி, லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் தீரும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். அடிமையாட்களால் ஆதாயம் இல்லை. செய் தொழிலில் கவனம் தேவை. உணவுப் பொருட்கள், பழ வியாபாரிகள் லாபம் அடைவர். தெய்வத் தொண்டுகள் பிரியமுடன் செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் இல்லை. மனைவிக்கு நோய் வாய்ப்படும். புதிய கடன்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. விவசாயம் பலிதமாகும். உறவினர்களால் பொருளாதார நெருக்கடி தீரும். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசுகள் கிடைக்கும். கமிசன் தொழில், கட்டிட சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவர்கள். புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வீடுகளைத் திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கக் கூடிய காலமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். தேவையான பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. காதல் விஷயங்களில் கவனமுடன் இருக்கவும். யாத்திரையின் போது பிரச்சனைகள் வரலாம். புதிய கடன்களை வாங்க வேண்டாம். முன் கோபத்தைத் தவிர்க்கவும். தியானம் செய்வது நல்லது. நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கக் கூடிய காலமாகும்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே, சுக்ரன் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில் மன அமைதி உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் கவனம் தேவை. கண், காதுகளில் நோய் ஏற்பட்டு நீங்கும். புதிய பெரிய மனிதர்களால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தகளுடன் பரிசுகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். அடிமையாட்களால் ஆதாயம் உண்டு. தொழில் ஸ்தாபனங்களை இடம் மாற்றத் திட்டம் போடுவீர்கள். விட்டுப் போன பழைய கட்டிடப் பணிகள் மீண்டும் தொடரும். நண்பர்களால் மன உற்சாகம் குறையும். தூரத்து நற்செய்திகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை.
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். தடைப்பட்ட பிள்ளைகளின் திருமண காரியங்கள் நிறைவேறும். சகோதரருக்கு உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தீர்த்த யாத்திரைகள் சென்று வருவீர்கள். அந்நிய நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று வர வாய்ப்புள்ளது. உணவுப் பொருட்களைக் கவனமுடன் உண்ணுதல் நன்று. பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆலயத் திருப்பணிகளில் பங்கு பெறுவீர்கள். வக்கீல்கள் மற்றும் நீர்வளத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவர். பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்தல் நன்று. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். தாய்க்கு உடல் நலம் பாதிப்பு உண்டாகும். பிறரிடம் முன் கோபத்தைத் தவிர்த்து விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளால் தன வரவு உண்டு. உடம்பில் எலும்பு, இரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். கூட்டுத் தொழில் ஆகாது. புதிய வீடு, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. மாமிச உணவு வியாபாரிகள், கம்ப்யூட்டர், மற்றும் இனையதளங்கள், வானொலி நடத்துவோர்களும் இவற்றில் பணி புரிவோர்களும் லாபம் அடைவர். அடுத்தவர் விசயத்தில் தலையிட வேண்டாம். மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலா ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரஹமாகும். வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பங்காளிகளுடன் செய் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். வங்கிகளின் மூலம் எதிர் பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். உடம்பில் அலர்ஜி, சளி போன்ற நோய் வந்து நீங்கும். வீட்டை அலங்கரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்களால் பொருட் செலவு உண்டாகும். கோர்ட் வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். தீராத பழைய கடன்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பைப் பெறுவர்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்..

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மருத்துவத்துறை சார்ந்தவர்கள், அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள் நற்பலன் அடைவர். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். புதிய வீடு மாற்றம் உண்டு. பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்கக் கூடிய காலமாகும். சகோதர்களால் ஆதாயம் உண்டு. வேண்டாத விஷயங்களில் தலையிடுவதில் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடிய காலமாகும். தந்தையின் உடல் நிலையில் பாதிப்பு வந்து நீங்கும். நீண்ட தூரப் பயணங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர் வருகையால் பொருட் செலவு உண்டு.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- கணபதி வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். கலைத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவர். தந்தையின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவு உண்டாகும். சகோதர, சகோதரிகளுடன் பிரச்சனைகள் உருவாகலாம். எதிர்பாராத யாத்திரை உண்டு. எதிரிகளின் தொல்லைகள் குறையும். மூலம், வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். வங்கிகளால் பொருட் வரவு உண்டு. பிள்ளைகளால் மன நிம்மதி குறையும். நீண்ட தூரப் பயணம் தள்ளிப் போடவும். கோர்ட் வழக்கு விசயங்களில் சாதகமான முடிவை எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளால் பொருட் செலவு உண்டாகும். காதல் விஷயங்கள் வெற்றி தேடித்தரும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிஹமாகும். செய் தொழிலில் பங்காளிகளுடன் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் அநுகூலம் உண்டாகும். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்கள் நட்பு ஏற்படும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் நல்லது. வீண் பொருள் விரையத்தைத் தவிர்க்கவும். புதிய ஆடைகள் வாங்கலாம். தூரத்து உறவினர் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகள் உண்டாகும். இரும்பு, இயந்திரம், இரசாயனத்தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். காதல் வெற்றி தேடித் தரும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. புதிய தொழில் தொடங்குவதைத் தள்ளிப் போடவும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். பொதுத் தொண்டுகளில் பிரியமுடன் சென்று பணியாற்ற வாய்ப்புள்ளது. அந்நிய நாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருப்பு, ஹோட்டல், ராணுவம், போலிஸ் துறை சார்ந்தவர்கள் நற்பலனடைவர். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும். எதிர்பார்த்த பழைய வர வேண்டிய பணம் கை வந்து சேரும். தென் திசையிலிருந்து பெண்களால் நற்செய்தி உண்டாகும். தூரத்து உறவினர் வருகையால் குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து நீங்கும். பிறருக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். காதல் விஷயங்களில் கவனம் தேவை.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தை மகன் உறவில் சிறிது பிரச்சனைகள் வந்து நீங்கும். தீராத நோய்க்கு விடை காணுவீர்கள். வீடு மாற்றம் ஏற்படக்கூடிய வாரமாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் தீரும். யாத்திரையில் கவனமுடன் இருக்கவும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். தொலைதூரப் பயணங்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளால் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

About The Author