இராசிபலன்கள் (5-11-2007 முதல் 11-11-2007 வரை)

மேஷம்:-

அன்பார்ந்த மேஷராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் நன்றாக பலிதமாகும். புதிய ஆடை அணிகலன்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள் வாங்குவீர்கள். சிலர் வீட்டைத் திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது. பெண்களால் பிரச்சனைகள் வந்து சேரும். எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. உடம்பில் நெருப்பு மற்றும் ஆயுதங்களால் சில சிறிய விபத்துகளால் வந்து போகும். ஹோட்டல் தொழில் செய்வோர்கள் அரசு உயர் அதிகாரிகள் லாபம் அடைவார்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வங்கிகளால் ஆதாயம் உண்டு. புதிய வாகனங்கள் மற்றும் நிலபுலன்கள் வாங்கலாம.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

அன்பார்ந்த ரிஷபராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். சமுதாயத்தில் புதிய பொருப்புகள் வந்து சேரும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். தாயின் உடல் நிலைப் பாதிப்படையும். உறவினர்களால் பொருட்செலவுகள் ஏற்படும் வட்டித் தொழில் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். கலைத்துறை சார்ந்தவர்கள், கல், மணல், செங்கல், சிமிண்ட் வியாபாரிகள் நற்பலனடைவார்கள். தொலைதூரப் பயணங்களால் வெற்றி கிடைக்கும். உடம்பில் எலும்பு மற்றும் இரத்த சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். கணவன் மனைவி உறவில் எச்சரிக்கை தேவை.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலெஷ்மி வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

அன்பார்ந்த மிதுனராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். ரேஸ், லாட்டரி மூலம் தனவரவு உண்டாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும். உடம்பில் இரத்த மற்றும் தோல் தொடர்பான பிணிகள் வந்து போகும். நீண்டத் தூரப் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கண்களில் கவனம் தேவைகணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பிரச்சனைகள் வந்து சேரும். தந்தையால் பொருள் வரவு உண்டாகும். உத்தியோகம் கிடைக்க வாய்ப்புள்ளது. கணிதத்துறை சார்ந்தவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள், மற்றும் காய்கறி வியாபாரிகள் நற்பலனடைவார்கள்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

அன்பார்ந்த கடகராசி அன்பர்களே சனீ நன்மை தரும் கிரகமாகும். காதல் வெற்றித் தேடித்தரும். சகோதரர்களால் தனவரவு உண்டு. தாயின் உடல் நிலைப் பாதிப்படையும். உடம்பில் உஷ்ணம் மற்றும் சுரம் சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கலைத்துறைச் சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டுதலும் பெறுவார்கள். கமிஷன், தரகுத் தொழில், அழுகல் சம்பந்தமான வியாபாரிகள் நற்பலனடைவார்கள். அடிமையாட்களால் புதிய பிரச்சனைகள் வந்து நீங்கும். செய்தொழில் மிக கவனமுடன் இருக்கவும் செய்யாத குற்றங்களுக்காக பழிச்சொல் வந்து நீங்கும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

அன்பார்ந்த சிம்மராசி அன்பர்களே சனியே நன்மை தரும் கிரகமாகும். பிள்ளை இல்லதாவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். உடம்பில் அலர்ஜி, மற்றும் சளி சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பெண்களால் ஆதாயம் இல்லை. யாத்திரையை விலக்குதல் நல்லது. பிள்ளைகளால் தனவரவு உண்டு. பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். மணமாகதவர்களுக்கு திருமணம் காரியம் கைகூடும். மாமன் வழியில் பண வரவு உண்டு. புதிய தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களை தள்ளிப் போடவும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

அன்பார்ந்த கன்னிராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். அரசியல் வாதிகள் கவனமுடன் இருக்கவும். பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. நண்பர்களால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வந்து போகும். பூ, பழம், இலை சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், மற்றும் பேராசிரியர்கள் லாபம் அடைவார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து நீங்கும். எதிர் பார்த்த பணம் கிடைக்க சற்று காலதாமதமாகும். உத்தியோகத்துறையினருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு. யாத்திரையில் புதிய பெரிய மனிதரர்கள் தொடர்புகளால் மன நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

அன்பார்ந்த துலாராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறை சார்ந்தவர்கள், அழகு சாதன பொருள் வியாபாரிகள், சினிமா, நாடகத்துறை போன்ற அமைப்பினர் லாபம் அடைவார்கள். சகோதரர்களின் தடைப்பட்ட தொழில்கள் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளது. உறவினர் வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கைகூடும். குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது. பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த அநுகூலம் கிடைக்காது. பணியாட்களிடம் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. உடம்பில் வாயு மற்றும் வயிறு உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலெஷ்மி வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

அன்பார்ந்த விருச்சிகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சிலருக்கு அந்நிய நாடு செல்ல வாய்ப்புள்ளது. போலிஸ், ராணுவம், தீயனைப்புத் துறை சார்ந்தவர்கள், அரசுத்துறை உயர்அதிகாரிகள், மின்சாரத்துறை சார்ந்த அலுவலர்கள் நற்பலன் அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் பாராட்டுதலும் பரிசும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். நாட்ப்பட்ட தீராத நோய்க்கு நல்லதொரு மருத்துவத்தின் மூலம் விடை காணும் காலமாகும். வராத கடன் கொடுத்த பணம் திரும்ப கை வந்து சேரும். பங்காளிகளால் ஆதாயம் இல்லை. புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளை சற்று தள்ளிப் போடவும். நீண்ட தூரப் பயணங்கள் உண்டாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

தநுசு:-

அன்பார்ந்த தநுசுராசி அன்பர்களே வியாழன், ராகுநன்மை தரும் கிரகமாகும். தந்தை மகன் உறவில் விரிசல் காணப்படும். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்க திட்டம் போடுவீர்கள். செய்தொழில் சில எதிர்ப்புகளை சந்தித்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். உணவுப் பொருள் வியாபாரிகள், இனிப்புத் திண்பண்ட வியாபாரிகள், கம்யூட்டர் சாதன வியாபாரிகள் லாபம் அடைவார்கள. பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் தீரும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும். மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தங்கள் மூலம் ஆதாயட் அடைவீர்கள். உடம்பில் முதுகு, மற்றும் மார்பு சம்பந்தமான வலிகள் வந்து போகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள், கருப்பு
இராசியான திசை:-வடகிழக்கு, வடமேற்கு
பரிகாரம்:-சிவன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

அன்பார்ந்த மகரராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் பொருட்செலவுகள் உண்டாகும். உடம்பில் வயிறு மற்றும் முழங்கால் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். கூல்டிரிங்ஸ், திரவபொருள்கள், மற்றும் ஐஸ் போன்ற குளிர்சாதன வியாபாரிகள், பூஜை பொருள் வியாபாரிகள் நற்பலனடைவார்கள். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகும். செய்தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. தந்தை மகன் உறவில் சுமுகமான சூழ்நிலை காணப்படுகிறது. புதிய வேலை வாய்ப்பு சம்பந்தமாக வெளிநாடு செல்லும் முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

அன்பார்ந்த கும்பராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அடுத்தவருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள. சமுதாயத்தால் புதிய பொறுப்புகள் வந்து சேரக் கூடிய காலமாகும். மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். நெருப்பு, எரிபொருள், கேஸ், வெல்டிங், சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் மன அமைதி உண்டாகும். உத்தியோகத் துறையினருக்கு இடமாற்றம் ஏற்படும். பூமி, நிலம் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்களை தள்ளிப் போடுதல் நல்லது. உடம்பில் மூளை மற்றும் சிறுநீர் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சூரியநமஸ்காரம் செய்து வரவும்.

மீனம்:-

அன்பார்ந்த மீனராசி அன்பர்களே புதன், கேது நன்மை தரும் கிரகமாகும். அரசியல் வாதிகளுக்கு ஆதாயம் இல்லை. யாத்திரையில் கவனமுடன் சென்று வருதல் நல்லது. சிலருக்கு புதிய வீடு மாற்றம் உண்டாகலாம். பொருளாதாரம் சுமாராக காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்க ச்று காலதாமதம் ஆகலாம். அந்நிய மதத்தவரால் ஆதாயம் உண்டு. உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். ரேஸ்., லாட்டரி போன்றவற்றை தவிர்த்தால் வீண் பொருட்செலவுகளைத் தவிர்க்கலாம். பேப்பர், பேனா, பிரிண்டிங், புத்தகம் சம்பந்தமான தொழில் செய்வோர்கள், தபால் தந்தித் துறையினர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:-5,7
இராசியான நிறம்:-பச்சை, கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடக்கு, வடமேற்கு
பரிகாரம்:-கணபதி, மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்”

About The Author