இராசிபலன்கள் (6-10-2008 முதல் 12-10-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராக இருக்கும். புதிய வீடு, நிலங்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். தேவையற்ற காரியங்களில் தலையிட வேண்டாம். வெளியூர் பிரயாணங்களின்போது வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் நன்று. பிள்ளைகளால் சிற்சில பிரச்சனைகள் வந்த போதிலும் அவர்களால் ஆதாயம் உண்டாகும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். விமான ஓட்டிகள், விமான நிலையப் பணியாளர்கள், இரசாயனத் தொழில் செய்வோர் லாபம் அடைவார்கள். குலதெய்வ வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். சூதாட்டம் போன்ற காரியங்களைத் தவிர்க்கவும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். தந்தை மகன் உறவில் இருந்து வந்த நீண்ட நாட்களாக உள்ள பிரச்சனைகள் நீங்கி சுமூகமான உறவுகள் ஏற்படும். வெளியூர் பிரயாணங்களைத் தவிர்த்தால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உத்தியோகத் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். வீடுகள் மற்றும் வாகனங்களைப் பழுது பார்க்கக்கூடிய காலமாகையால் பொருட் செலவுகள் உண்டாகும். தாய் வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில அநுகூலங்கள் உண்டாகும். தூரத்து நற்செய்திகள் வீடு வந்து சேரும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். நண்பர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள். காது, மூக்கு சம்பந்தமான உபாதைகள் வரக்கூடும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்::- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் பிரயாசத்தின் மேல் சரி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் உண்டாகி மறையும். கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். திடீர் அதிர்டம் மூலம் தென்மேற்கு திசையில் இருந்து பொருள் வரவு உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு, வாகனங்கள் வாங்கக் கூடிய காலமாகும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் இருக்கவும். குழந்தைகளுக்கு மருத்துவ் செலவுகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாகின்ற காலமாகும். வண்டி, வாகனங்களில் யாத்திரையின் போது கவனம் தேவை.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்::- சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் சில சிக்கல்கள் வந்து சேரும். உறவினர்களின் வரவால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கக்கூடும். வெகு காலமாக இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். நண்பர்களால் வீண் பொருட்செலவு ஏற்படலாம். தந்தையின் உடல் நிலையில் இருந்து வந்த நோய் நீங்கி நல்ல முன்னேற்றம் காணப்படும். நெருப்பு, எரிபொருள், ராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். அரசியல்வாதிகள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். மூத்த சகோதரர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். உடல் நிலையில் வாயு மற்றும் வலி சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 2
இராசயான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்::- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் ஆரம்பம் செய்ய எண்ணுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவுகள் மேம்படும் காலமாகும். கமிஷன், தரகு, குத்தகை சம்பந்தமான தொழிற்செய்வோர்கள் லாபம் அடைவார்கள். புதிய வீடு, நிலங்கள் வாங்குவீர்கள். ரேஸ், லாட்டரி போன்றவற்றால் தன வரவு உண்டு. அடிமையாட்களால் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். சொத்து சம்பந்தமான பழைய வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தேவையில்லாமல் மற்றவர் விஷயங்களில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்கவும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், காகிதம், பேனா, பென்சில், பிரிண்டிங் சம்பந்தமான தொழில்கள் செய்வோர் மற்றும் தபால்தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள். வீண் பொருள் விரையங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும். குலதெய்வ வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலமாகும். வெளிநாடு சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல தகவல்களைப் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் சேர்கையைத் தவிர்த்தல் நல்லது. பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடகிழக்கு
புரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி, நிலம் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் கவனம் தேவை. தீர்த்த யாத்திரை செல்லுவீர்கள். வங்கிகள் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரும். தூரத்தில் இருந்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். தீராத நோய்க்குப் புதிய முறை மருத்துவம் மூலம் விடை காணுவீர்கள். வீடுகளைத் திருத்திக் கட்டவும், பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கவும் முயற்சிப்பீர்கள். தஙகம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை விற்பனை செய்வோர்கள் லாபம் அடைவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். செல்வ செல்வாக்கு புகழ் கூடும். வராத கடன் கொடுத்த பணம் மீண்டும் கை வந்து சேரும்.
அரசு சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த அநுகூலம் உண்டாகும். விவசாயம் சுமாராகக் காணப்படும். உத்தியோகத் துறையினருக்கு இடமாற்றம் ஏற்படலாம். மன தைரியத்துடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். இரும்பு, இயந்திரம், மளிகைப் பொருட்கள், எண்ணை வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் கவனமுடன் இருக்கவும். தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சனைகள் வந்து நீங்கும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்படலாம். சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகக் கூடும். உடல் நிலையில் கவனம் தேவை.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

தநுசு:-

தநுசு ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். தந்தை மகன் உறவுகள் பலப்படும். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். வெளி நாட்டு முயற்சிகளில் சற்றுக் கால தாமதம் ஏற்படலாம். யாத்திரைகளை விலக்குதல் நல்லது. சிலருக்கு வீடு மற்றும் அலுவலக மாற்றம் உண்டாகலாம். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளைத் தள்ளிப் போடவும். கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டால் பிரச்சனைகள் வரலாம். உறவினர் வரவால் மன மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். தண்ணீர், கூல்டிரிங்ஸ் போன்ற குளிர்பான வியாபாரிகள் நல்ல பலன்களை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் எச்சரிக்கையுடன் இருக்கவும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் பொருள் இழப்புகள் உண்டாகக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். பொது நலக் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். நண்பர்களால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகும். பொதுநலத் தொண்டு நிறுவனத்தினர்கள், கோவில் பணி செய்வோர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். தந்தை வழிச் சொத்துக்கள் சம்பந்தமாக பிரச்சனைகள் உருவாகலாம். தெற்குத் திசையில் இருந்து பெண்களால் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உத்தியோக விஷயங்களில் கால தாமதம் ஆகலாம். அடிமையாட்களால் ஆதாயம் இல்லை.
அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பூமி, நிலம், வாகனம் சம்பந்தமான பேச்சுக்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கட்டிட சம்பந்தமாகிய பொருட்கள், ஹோட்டல் தொழில் செய்வோர்கள், உணவு தானியப் பொருள் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். அரசுத்துறை சார்ந்த வழக்குகளில் சற்றுக் காலதாமதமாகவே முடிவுகள் கிடைக்கும். அடுத்தவருக்காக ஜாமீன் போட்டு அவமானப்பட நேரிடலாம். காதல் விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். கை கால்களில் கவனம்
தேவை.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்;:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் பெரிய மனிதர்கள் தொடர்புகள் உண்டாகும். வீடு வாகனங்கள் புதிதாக வாங்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளால் பொருட்செலவுகள் உண்டு. நாட்பட்ட நோய்க்கு நல்லதொரு மருத்துவம் மூலம் விடை காணுவீர்கள். தொலை தூரப் பயணங்களில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமாகிய உபாதைகள் வந்து
போகும். சம்பந்தம் இல்லாத நபர்களால் காரணமற்ற பிரச்சனைகள் உண்டாகும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பூ, பழம், இலை, பூஜை சம்பந்தமாகிய பொருட்கள் வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர், அம்மன் வழிபாடு செய்து வரவும்.

About The Author

1 Comment

Comments are closed.