இராசிபலன்கள் (7-4-2008 முதல் 13-4-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து நீங்கும். புதிய கடன்கள் வாங்குவீர்கள். செய்தொழிலில் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடு, நிலம் போன்ற விஷயங்களில் எடுத்த முயற்சிகள் தோல்வி அடையும். தாய்க்கு உடல் நிலை பாதிப்பு அடையும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் ஆதாயம் அடைவீர்கள். கமிஷன் தொழில், அழுகல் பொருள்களாகிய மீன், மாமிசம், முட்டை போன்ற உணவு வியாபாரிகள், சுரங்க வேலை செய்வோர்கள், மீன் பிடித் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். காதல் விபகாரங்களைத் தள்ளிப் போடவும். கோர்ட் வழக்கு விஷயங்கள் நன்மையுடன் முடியும். உடம்பில் மூலம், முதுகு, கால் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். இரும்புத் தொழில் செய்வோர்கள், அடிமைத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். உடம்பில் வாயுத் தொல்லைகள் வர வாய்ப்புள்ளது. நெருப்புத் தொழில் செய்வோர்கள், கேஸ், வெல்டிங் தொழில் நடத்துவோர்கள், எலக்டிரிக் சாதன வியாபாரிகள், இராணுவத்துறை, போலிஸ் பணி செய்வோர்கள் இலாபமடைவர். குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உடம்பில் நரம்பு சம்பந்தமான பிணிகள், சிறுநீர்த் தொல்லைகள், தொற்று நோய்களால் பாதிப்பு ஏற்படும். கட்டிட சம்பந்தமாகிய கல், மணல், செங்கல் தொழில் செய்வோர்கள், பூ, பழம், நறுமண சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், பொதுத் தொண்டு நிறுவனம் நடத்துவோர்கள் நற்பயன் அடைவார்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். பிள்ளைகளால் பொருட் செலவு உண்டு. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- அம்மன், ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் சிரம், முகம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். எழுத்துப் பணி செய்வோர்கள், பலசரக்கு எண்ணெய் வியாபாரிகள், காண்டிராக்ட் தொழில் செய்வோர் இலாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நித்திரை பங்கம் ஏற்படும். நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், அரசுப் பணியில் ஈடுபடுவோர்களுக்கு நற்பலன், மேலதிகாரிகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோக உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். கண்களில் கவனமுடன் இருக்கவும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிஹமாகும். உடல் நிலையில் வயிறு, மூலம், குடல் சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். நோட்டு, பென்சில், பேனா மற்றும் ஸ்டேஷனரி சாமான்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், காய்கறி வியாபாரிகள், தொலைத் தொடர்புப் பணிகள் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். சகோதர சகோதரிகளால் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சிகளைத் தள்ளிப்போடவும். தாய்வழி மாமன் மூலம் சிற்சில நன்மைகள் ஏற்படும். கூட்டு முயற்சிகள் வெற்றியளிக்காது. உடம்பில் இரத்தம், இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசுத் துறையால் ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். வீடு, கார், நிலம் போன்றவைகளால் பொருட் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தன வரத்து உண்டு. வீடு, நிலம் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கிச் சுமுகமான உறவுகள் ஏற்படும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். உடம்பில் எலும்பு, நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். தன நெருக்கடி மாறிப் பொருளாதார உயர்வு ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். திடீர் தன வரத்து தென் திசையிலிருந்து உண்டாகும். எதிர்பாராத தொழில்கள் தாமாக வந்து சேரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடம்பில் காது சம்பந்தமான நோய்கள், இரத்த காயங்கள் போன்றவை வந்து நீங்கும். கட்டிட சம்பந்தப்பட்ட தொழில்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், திருமண தகவல் மையம் நடத்துவோர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி தேடித் தரும். வீடு மாற்றம் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும். பொதுக் காரியங்களில் தலையிடுவதை தவிர்த்தல் நல்லது. உடம்பில் மேகம், உஷ்ணம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். காண்டிராக்ட் தொழில், நெருப்பு, தீயணைப்புத் துறையைச் சார்ந்தவர்கள் லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டு. திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும. ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் இல்லை. தந்தைக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும். மனைவியால் அநுகூலம் உண்டாகும். புதிய தொழில்கள், கூட்டுத் தொழில் வியாபாரம் ஆரம்பம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். உடம்பில் கை, முதுகு சம்பந்தமான நோய்கள், தலைவலி போன்றவை வந்து நீங்கும். கோவில் பணிபுரிவோர்கள், தர்மஸ்தாபனங்கள் நடத்துவோர்கள், கம்ப்யூட்டர் வியாபாரம் செய்வோர்கள், வக்கீல்கள், பேராசிரியர் நற்பலடைவார்கள். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து நீங்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு, லக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். எடுத்த காரியங்களில் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் பிரயாசையின் மேல் சரி செய்து விடுவீர்கள். மன சஞ்சலம் உண்டாகும். யாத்திரைகள் வெற்றியளிக்காது. கணவன் மனைவி உறவுகளில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் இருக்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். அரசியல்வாதிகள் லாபம் அடைவார்கள். பிள்ளைகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். வீடு மாற்றம் உண்டாகும். தூரத்து யாத்திரை வெற்றி தரும். சகோதரர்களால் அனுகூலம் இல்லை.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். தந்தை மகன் இடையே உறவுகள் நன்றாக இருக்கும். தோல் பதனிடும் தொழில் செய்வோர்கள், இரசாயனத் தொழில் செய்வோர்கள், மர வியாபாரிகள், கோவில்களில் பணிபுரிவோர்கள், பூசை சாமான்கள் வியாபாரம் செய்வோர்கள், திரவ சம்பந்தமான கூல்டிரிங் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். வங்கிகள் மூலம் லாபம் அடைவீர்கள். கலைத்துறையினர் எச்சரிக்கையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவுகளில் சிற்சில பிரச்சனைகள் வந்து நீங்கும். பொருளாதார நெருக்கடி வந்து சமாளித்துக் கொள்வீர்கள். நீண்ட தூரப் பயணம் மூலம் தனவரவு உண்டாகும். புதிய வாகனம் அல்லது பழைய வாகனங்களைப் புதுப்பிப்பதில் பொருட் செலவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள். உடம்பில் நீர் சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்து நீங்கும். எழுது பொருள் சம்பந்தமான வியாபாரிகள், எழுத்து உத்தியோகம் பார்ப்பவர்கள், தொலைத் தொடர்புப் பணியாளர்கள், அச்சுத் தொழில் செய்வோர்கள், இண்டர்நெட் தொடர்பு உள்ளவர்கள் லாபம் அடைவார்கள.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

*****

About The Author