இராசிபலன்கள் (7-7-2008 முதல் 13-7-2008 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொது நலக் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொருளாதாரம் சுமாராக இருக்கும். கலைத்துறையினர் மற்றும் அழகு சாதானப் பொருள் வியாபாரிகள், கலைத்துறை சம்பந்தமான பொருள் விற்பனை செய்வோர் லாபம் அடைவார்கள். உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு மணமாகின்ற காலம் ஆகும். பங்காளிகளால் ஆதாயம் உண்டு. செய்தொழிலில் கவனம் தேவை. தொலைதூரப் பயணங்களில் சுமாரான வெற்றி கிடைக்கும். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் உண்டாகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்யவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கமிஷன், தரகு, காண்டிராக்ட் தொழில் செய் வோர்கள், பூசைப் பொருள் வியாபாரிகள், கோவில் திருப்பணி செய்வோர்கள் லாபம் அடைவார்கள். சூதாட்டத்தைத் தவிர்க்கவும். நண்பர் மற்றும் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். வராத பணம் பிள்ளைகளால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பீர்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். மாமன் வழி மூலம் சில ஆதாயம் அடைவீர்கள். உறவினர் வரவால் சில பிரச்சனைகள் வந்து போகும். வீடு மாற்றம் உண்டாகலாம்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து அரிசி தானம் செய்யவும

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, சனியே நன்மை தரும் கிரகம் ஆகும். தொழிற்சாலைகளை விருத்தி செய்வீர்கள். உடம்பில் சுரம், மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து தீரும். திரவ சம்பந்தமான பொருட்கள், அழகு சாதனப் பொருள் வியாபாரிகள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர் லாபம் அடைவர். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். கண்களில் கவனம் தேவை. அடுத்த மதத்தவரால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளில் சில தடைகள் வந்து விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. மன சஞ்சலங்கள் தீரும். பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைக்கும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்யவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். சினிமா, நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், எலக்டிரிக் மற்றும் போலிஸ் துறை சார்ந்தவர்கள் லாபம் அடைவர். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். சம்பந்தமில்லாத நபருடன் பிரச்சினைகள் வரலாம். கடல் யாத்திரை வெற்றியளிக்கும். பிறருக்காக உதவிக்கரம் நீட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தூரத்து யாத்திரைகளை விலக்குதல் நல்லது. சகோதரர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்க்கவும். விருந்தினர் வரவால் பொருட்செலவு உண்டாகும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். குலதெய்வ வழிபாடு செய்து வரவும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு. மனைவியால் பொருள் வரவு உண்டு. தந்தை மகன் உறவால் பிற பிரச்சனைகள் வந்து நீங்கும். பழைய வாகனங்களைப் பழுது பார்க்க நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். பணப் புழக்கம் சுமாராக இருக்கும். இருப்பிடம் சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளுடன் பிரச்சினைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்யவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூர்வீக இடங்களை விட்டுப் பெயர்ந்து செல்லுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் நன்றாக இருக்கும். பங்காளிகளால் ஆதாயம் உண்டு. மனைவியின் உடல் நிலை பாதிப்படையும். விஞ்ஞானிகள் வெற்றி பெறுவர். யாத்திரைகளில் புதிய செல்வந்தர்கள் சந்திப்பால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். விட்ட பொருள் திரும்பக் கிடைக்கும். சகோதரர்களுடன் பிரச்சினைகள் உருவாகும். தாயின் உடல் நில சற்று பாதிப்படையும். விநோத விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், தபால் தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள். வாய், பல், காது, சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்யவும்.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நோய்க்கும் புதிய மருத்துவ சிகிச்சை மூலம் விடை காணுவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைக்கக்கூடிய வாரமாகும். வீட்டில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம். தீர்த்த யாத்திரையால் மன நிம்மதி உண்டாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் சில லாபம் கிடைக்கும். உத்தியோகத் துறையினர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது. அரசு சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்யவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். ஆடு, மாடு, போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். ஆலயப்பணி மற்றும் மன நல விடுதி சார்ந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். விவசாயம் சுமாராகக் காணப்படும். ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்க எண்ணுவீர்கள். அடிமையாட்களால் ஆதாயம் இல்லை. குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள். கல்வித் துறையினர் நன் மதிப்பைப் பெறுவர். மன தைரியத்துடன் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் செய்யவும்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, புதன், கேது நன்மை தரும் கிரகங்களாகும். வேற்று மதத் தவரால் ஆதாயம் உண்டு. பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். நண்பர் உதவியால் சிறிது பண உதவி கிடைக்கும். காதல் விஷயங்களில் பிரச்சனைகள் வரலாம்.உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு இட மாற்றம் உண்டாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதைத் தள்ளிப் போடவும். பழைய கட்டிடங்களைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். மன நிம்மதிக்காக உல்லாசப் பயணங்கள் செல்லுவீர்கள்.

இராசியான எண்:- 5, 7
இராசியான நிறம்:- பச்சை, கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு, பிதுர் வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். விபரீத எண்ணங்களை விலக்கவும். இணையதளம், தொலைக்காட்சி, வானொலி நடத்துவோர் லாபம் அடைவர். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். யாத்திரைகளை விலக்குதல் நல்லது. புதிய அணிகலன்களை வாங்குவீர்கள். கலைத்துறையினர் மற்றும் அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவர். கிழக்குத் திசையில் இருந்து நற் செய்திகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து சிகப்பு ஆடை தானம் செய்யவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது. உடம்பில் காது சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற காரியங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். புதிய கார் மற்றும் வாகனங்களை வாங்குவதைத் தள்ளிப் போடவும். தந்தை மகன் உறவில் சில பிரச்சனைகள் வந்து தீரும். இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். தாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காதல் விஷயங்களில் கவனம் தேவை.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். வியாபாரத்தில் திடீர் ஒப்பந்தம் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் மாற்றம் செய்யலாம். வேலையாட்களால் ஆதாயம் உண்டு. புதிய நிலம் மற்றும் வீடு வாங்கத் திட்டம் போடுவீர்கள். யாத்திரையின் போது எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது. நண்பர்களுக்கு வீண் பொருட் செலவு செய்வதைத் தவிர்க்கவும். முன்கோபத்தைத் தவிர்த்தல் உகந்ததாகும். ரேஸ், லாட்டரி மூலம் திடீர் தனவரவு ஏற்படலாம். பள்ளிக் கூடங்கள், அநாதை விடுதிகள் நடத்துவோர்கள், சமுதாயத் தலைவர்கள், அற நிலையத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.”

About The Author