இராசிபலன்கள் (9-6-2008 முதல்15-6-2008 வரை)

மேசம்:-

மேசராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். நோட்டு, பேனா, பென்சில் போன்ற வியாபாரிகள் தொலைபேசி வங்கிப் பணியாற்றுவோர்கள் மருத்துவமனைகளில் பணியாற்றுவோர்கள், காய்கறி வியாபாரிகள் லாபம் அடைவார்கள். யாத்திரைகளில் நற்பலன் அடையலாம். புதிய வீடு வாங்குவீர்கள். மனசஞ்சலம் உண்டாகும். உடம்பில் மேக சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. கலைத்துறையினருக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். காதல் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து புதன்கிழமை விரதமிருந்து வரவும்.

ரிசபம்:-

ரிசபராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பூ, பழம் போன்ற வியாபாரிகள், பூசைப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள், கல்லூரி முதல்வர்கள், ஆலயப்பணி செய்வோர்கள், கம்யூட்டர் தொழில் நடத்துவோர் லாபம் அடைவர். வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள். உடல் நிலையில் இதயம், வயிறு சம்பந்தமான உபாதைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய் வழிச் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடி வந்து நீங்கும். காதல் விஷயங்கள் தோல்வியடையும். வடகிழக்குத் திசையிலிருந்து பொருள் வரவு உண்டு.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக்கிழமை விரதமிருந்து சிவ வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.தந்தை மகன் உறவுகளில் பிரச்சனைகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். மன பயம் தவிர்க்கவும். எதிரி தொல்லைகள் விலகும். யாத்திரையின் போது கண்டங்கள் வந்து நீங்கும். வடகிழக்குத் திசையிலிருந்து பொருள் வரவு உண்டு. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். உடம்பில் எலும்பு ரத்தம் சம்பந்தமான பிணிகள் வந்து விலகும். கோவில் பணி செய்வோர்கள், தர்ம ஸ்தாபனங்கள் நடத்துவோர்கள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவர்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-சனிக்கிழமை விரதமிருந்து பிதுர் வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனவை உறவு நன்றாக இருக்கும்.கட்டிட சம்பந்தமான பொருட்கள், கலைப் பொருட்கள், வியாபாரிகள், கலைக் கூடம் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலனடைவர். பங்காளிகளால் ஆதாயம் கிடையாது. புதிய கடன்கள் வாங்குவீர்கள். சகோதரர்களுடன் பிரச்சனை வந்து நீங்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளால் பணச் செலவகள் ஏற்படும். தந்தைக்கு உடல் நிலை பாதிப்படையும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். வீடு மற்றும் கார் போன்ற வாகனங்களால் பொருட்செலவுகள் ஏற்படும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக்கிழமை விரதமிருந்து மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் சீதள சம்பந்தமான நோய்கள், வலி சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். கணக்குத் தொழில் செய்வோர்கள் வங்கிப்பணியாளர்கள், தபால் தந்தித் துறையினர் ஆகியோர்கள் நற்பலன் அடைவர்.குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். தாய் வழிச் சொந்தங்களால் பொருட் செலவு ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படக்கூடிய காலமாகும். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாதிகள் குறைய வாய்ப்புகள் உள்ளன. செய்யாத குற்றங்களுக்காக மாட்டிக் கொள்வீர்கள். எச்சரிக்கை தேவை.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன்கிழமை விரதமிருந்து மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னிராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதால் பணச் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.உடம்பில் நெருப்புக்காயங்கள், விபத்துக்களால் சிறிய தொல்லைகள் வந்து விலகும கிழக்குத் திசையிலிருந்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். நெருப்பு சம்பந்தமான தொழில்கள், அரசுப்பணியாளர்கள், மந்திரி பதவி வகிப்பவர்கள், மருத்துவர்கள், மருத்துவ தொழிற்சாலைகள் நடத்துவோர்கள் லாபம் அடைவர். பொருளாதாரம் சீராக காணப்படும்.உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நிலம் வீடு மாற்றம் ஏற்படும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் தொடங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடம்பில் தோல் சம்பந்தமான வியாதிகள் உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். ஆலய பொருட்கள், வியாபாரம் செய்வோர்கள், திரவ சம்பந்தமான திரவ வியாபாரிகள் லாபம் அடைவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த வந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு. மனைவிக்கு நோய் வாய்ப்படும். செய்தொழிலில் புதிய பிரச்சனைகள் ஏற்படும். வங்கிகள் மூலம் கடன் பெற விரும்பியவருக்கு கடன்கள் கிடைக்கும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கட்கிழமை விரதமிருந்து அம்மன் வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். ஆபரணங்கள் மற்றும் கட்டிடங்களின் மூலம் வங்கிகளிலிருந்து கடன் பெறுவீர்கள். உடம்பில் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து தீரும். இராணுவத்துறையைச் சார்ந்தவர்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவர். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். நண்பர்களால் பொருட் செலவுகள் ஏற்படும். புதிய தொழில்கள் தொடங்குவதைத் தள்ளிப் போடவும். கடன்கள் தொல்லை தரும். தந்தைக்கு உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் மேலிடும். தூரத்து நற்செய்திகளைக் கேட்பீர்கள்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய்கிழமை விரதமிருந்து முருகன் வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசுராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் உஷ்ண சம்பந்தமான பீடைகள் எலும்பு, இரத்த சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், கலைத்துறையினர் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவர். குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும். பூமி சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நற்பயனடைவார்கள். அரசு வழக்கு போன்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக்கிழமை விரதமிருந்து மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்..

மகரம்:-

மகரராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடம்பில் உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து விலகும். நெருப்புத் தொழில், போலீஸ் துறையை சார்ந்தவர்கள், கமிஷன், தரகு வியாபாரிகள் லாபம் அடைவர். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளால் லாபம் இல்லை. நண்பர்களால் பொருள் வரவு உண்டு. புதிய பங்காளிகளுடன் கூட்டுத் தொழில் செய்ய லாபம் அடைவர். கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். காதல் விஷயங்கள் வெற்றி தரும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய்கிழமை விரதமிருந்து துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்பராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் மூட்டு முழங்கால்களில் தொல்லைகள் வாத சம்பந்தமான பிணிகள் ஏற்பட்டு விலகும். இரும்பு இயந்திர சம்பந்தமான வியாபாரிகள், எண்ணை, பலசரக்கு பொருள்கள் விற்பனை செய்போர்கள் லாபம் அடைவர். சகோதர சகோதரிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கைகளால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் நற்பெயர், புகழ் உண்டாகும். அரசு வழக்குகள் சாதகமான தீர்ப்பை தேடித்தரும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக்கிழமை விரதமிருந்து சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்புக் கடை வைத்து வியாபாரம் செய்வோர்கள் அடிமைத்தொழில் செய்வோர்கள் புலால் உணவு வியாபாரிகள் லாபம் அடைவர்.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தூரத்து நற்செய்திகள் தேடி வரும். நீண்ட தூரப் பயணங்களால் வெற்றியடைவீர்களள். தனப்பழக்கம் சீராக இருக்கும். நித்திரையில் பங்கம் ஏற்படலாம். வீடு மாற்றம் மூலம் மன நிம்மதி உண்டாகும். புதிய ஆடைகள்அணிகலன் வாங்குவீர்கள். செய்தொழிலில் லாபம் பெறுவீர்கள். உடம்பில் மூலம் சம்பந்தமான வியாதிகள் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக்கிழமை விரதமிருந்து நவகிரக வழிபாடு செய்து வரவும்.

About The Author