இராசி பலன்கள் (21-7-2008 முதல் 27-7-2008 வரை)

மேஷம் :-

மேஷராசிஅன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். நீர்வளம், நிலவளத்துறை சார்ந்தவர்கள், தபால் தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள். கண்களில் கவனம் தேவை. குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும். தொலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இருப்பிடம் மாறவும், வீடுகளை திருத்திக் கட்டவும் திட்டம் போடுவீர்கள். கண்களில் கவனம் தேவை.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். மன தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவதுடன் நற்பெயரெடுப்பீர்கள். விபரீதமான எண்ணங்களைச் நினைத்து மன குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். கலைத்துறையினர் ஆதாயம் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டு. பழைய வாகனங்களை விற்பதற்கு வாய்ப்புள்ளது. மனைவியால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கோவில், குளம் மற்றும் சமுதாய முன்னேற்ற நற்பணிகளில் ஈடுபட்டு நற்பெயரெடுப்பீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். வீடுகளைத் திருத்திக் காட்டுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். சிறு குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும். குல தெய்வ வழிபாடு செய்து வரவும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். உடல் நோய்க்கு நல்லதொரு மருத்துவத் தீர்வுகள் கிடைக்கும். தண்ணீர், கூல்டிரிங்ஸ் சம்பந்தமான தொழில்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். வாகனங்களில் எச்சரிக்கையாகப் பயணம் செய்வது நல்லது. முன் கோபம் தவிர்க்கவும். பங்காளிகளால் பொருட்செலவு உண்டாகும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் செய்யத் திட்டம் போடுவீர்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு புதிய முயற்சிகள் மூலம் உத்தியோகம் கிடைக்கும். பூ, பழம், நறுமணப் பொருட்கள், பூஜை சாதன வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வங்கிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். யாத்திரைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய வீடு வாங்குவீர்கள். தாய் மாமன் வழியில் சில சுப காரியங்கள் நடக்கும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் மேலிடும். உற்றார் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். இரசாயனத் தொழில் மற்றும் கமிஷன், கன்ஸ்டிரக்ஸன் தொழில் செய்வோர் லாபம் அடைவர். குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும். வீட்டை அலங்காரம் செய்வீர்கள். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்

துலாம் :-

துலாராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. பூமி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வங்கிகளால் எதிர்பாத்த பணம் கிடைக்கும். அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் கவனம் தேவை. மறை முக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து சில மாற்றங்கள் ஏற்படும். யாத்திரைகளில் நற்பலன் உண்டாகும். உறவினர்களால் பொருட்செலவு உண்டாகும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு சுமாராகக் காணப்படும். புதிய மனக் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நல்லது. உடம்பில் இரத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து போகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் எச்சரிக்கை தேவை. யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விஞ்ஞானத்துறை சார்ந்தவர்களின் புதிய ஆராய்ச்சிகளில் நல்ல வெற்றி அடைவீர்கள். ஆலயப்பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. நித்திரை பங்கம் ஏற்படும். மூத்த சகோதரருக்கு மருத்துவச் செலவகள் ஏற்படும். உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான சூழல் உருவாகும். பிள்ளைகளில் உடல் நிலையில் கவனமுடனிருக்கவும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, போலீஸ், ராணுவம், மின்சாதனத்துறை சார்ந்தவர்கள் நற்பலனடைவார்கள். உடம்பில் சுரம், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். செல்வந்தர்கள் தொடர்பால் நிம்மதி அடைவீர்கள். இணையதளங்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள் நற்பலனடைவார்கள். தடைப்பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும். பெண்களால் ஆதாயம் உண்டு. தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகத் துறையினர் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. மகான்களில் ஆசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். வீண் பொருள் விரையம் ஏற்படலாம். வர வேண்டிய பணம் சிறிது கால தாமதமாகவே கிடைக்கும். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களுக்கு பொருட்செலவு உண்டாகும். ஆபரேஷன் போன்ற காரியங்களை தள்ளிப் போடுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளுடன் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சனைகள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும். பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வம், செல்வாக்கு, புகழ் கூடும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வீடுகளில் கவனமுடன் இருத்தல் நல்லது. சம்பந்தமில்லாத நபர்களால் புதிய பிரச்சினைகள் உருவாகக் கூடும். தீர்த்த யாத்திரைகளைத் தள்ளிப் போடவும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.”

About The Author