இருளும் தருணங்களில்..

உராய்வுகளும் மோகங்களும் மேலோங்கி
காதல் தொலைந்திருந்து
நானும் என்னவளும் துழாவிய நாட்கள்..
எண்ணிக்கை சற்று அதீதம்..

என் விரல் இடுக்குகளில்
இடைவெளியிட்டு கோர்த்து
வீணை மீட்டும் அவள் விரல்கள்…

விழிகளுக்கருகில் கோலமிட்டு
அவள் மயிர்கீற்றுகளில்
சுருள்படும் குறும்புத்தனம் மிக்க
சுழற்சிகள்..

அவள் ஒற்றை விரலும் என் நெற்றியும்
ஒன்றிப்போக
அவளிடும் திருநீறு..

காதோரம் குறுகுறுக்க
இதழ் குவித்து
மெலிதான மூச்சுக்காற்றோடு
அவளுதிர்க்கும்
எனக்கென்று அவளிட்ட செல்லப் பெயர்..

மீண்டெழுந்து மீட்டு வர
எத்தனப்பட்டு அவள் செய்யும் சில…
மனதோரம் ரம்மிய ரீங்காரமிட்டு
துளிர்விடும் காதல் மடுக்கள்..
அம்மடுக்கள் மீது
ஏறுக்கான கம்பீரத்துடன்
நானும் என் காதலும்..

About The Author

2 Comments

  1. கீதா

    வார்த்தைகளை வசியப்படுத்தியொரு வசீகரக் காதல்கவிதை. பாராட்டுகள்.

Comments are closed.