இலாகுபாரதி கவிதைகள்

1. என் பார்வைக் கணைகள்
தீண்டும் நேரங்களில்
பட்டாம்பூச்சியாகிவிடுகின்றன
அவள் விழிகள்

2. ரயிலைப் பார்க்கும் போதெல்லாம்
எனக்கு அவள் இடை ஞாபகம்

3. ஒருபோதும் என்னை
யாரும் வீழ்த்திவிடமுடியாது
மௌனத்தை அவள் விரும்பாதவரைக்கும்

4. மெல்ல நடக்கிறாள் சலங்கை சிரிக்கிறது
தேவதையை தழுவி லயித்த மகிழ்ச்சி.

5. அவளிடம்
காதலை சொல்ல இயலாத என்னை
கேலிபேசும் கால்கொலுசே
நீ அவளை இழந்து
கழன்றுபோகக் கடவது…

6. ஒரேயொருமுறை
என் தோட்டம் வந்துபோயேன்
மலர்கள் உன்னிடம்
சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமாம்…

7. பாதங்கள் நோக
நீ ஏன் நடக்க வேண்டும்
என் தோள்கள் இருக்கும்போது…

About The Author