இவையும்…

இவையும்…

சிறகு பரத்தி
அடிபட்டு வீழ்ந்துபோகும்
காகமொன்று.
சுற்றி நின்று கரையும்
கூட்டம்
எங்காவது கேட்கும்
அமாவாசைக் குரலுக்கு
விரைந்துபோகும்
எல்லாம் மறந்து.

பெ(வெ)ண்ணாறு

வற்றிய ஆற்றின் கரையில்
தீராநதி
விதவையின் வீடு.

இயல்பு

வலை வீசுதலில்
மீன்கள் சிக்குகின்றன
ஒருபோதும்
நதியல்ல…

*****

About The Author